For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சொந்த அணி தோற்க வேண்டும் என விளையாடிய 35 வயது பாகிஸ்தான் வீரர்.. முன்னாள் கேப்டன் பரபர குற்றச்சாட்டு

மும்பை : டி20 உலக கோப்பையில் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் தோற்க வேண்டும் என்பதற்காகவே 35 வயது வீரரான இமாத் வசீம் விளையாடியதாக முன்னாள் கேப்டன் சலீம் மாலிக் குற்றச்சாட்டி இருக்கிறார்.

குரூப் ஏ பிரிவில் லீக் சுற்றில் பாகிஸ்தான் அணி ஏற்கனவே அமெரிக்காவிடம் தோற்ற நிலையில் தற்போது இந்தியாவிடம் 120 ரன்கள் என்று இலக்கை எட்ட முடியாமல் தோல்வியை சந்தித்து இருக்கிறது.

t20 world cup ind vs pak hardik pandya rohit sharma virat kohli indian national cricket team cricket 20 2024

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு இருந்த நிலையில், கடைசி கட்டத்தில் ரன்களை சேஸ் செய்ய முடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் சொதப்பினர். குறிப்பாக அந்த அணியின் 35 வயது வீரரான இமாத் வசீம் 23 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 15 ரன்களை அடித்தார். இது பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்த நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த முன்னால் பாகிஸ்தான் கேப்டன் சலீம் மாலிக் இமாத் வசீமை கடுமையாக சாடி இருக்கிறார்.

இது குறித்து பேசிய அவர் இமாத் வசீம், விளையாடுகிற விதத்தை பாருங்கள். அவர் வேண்டுமென்றே பாகிஸ்தான் அணி தோற்க வேண்டும் என்பது போல் விளையாடியதாக தெரிகிறது. வேண்டுமென்றே பந்தை வீணடித்து ரன் சேர்க்கக்கூடாது என விளையாடினாரா என்று சந்தேகம் அடைய வைக்கின்றது. அவருடைய ஆட்டம் மூலம் பாகிஸ்தான அணி ரன் சேஸ் செய்ய முடியாமல் தடுமாறியது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இதனை தொடர்ந்து பேசிய முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ஷாகித் அப்ரிடி அணியை ஒருங்கிணைக்க பாபர் அசாம் தவறிவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ஒரு கேப்டன் என்பவர் அணியை ஒருங்கிணைத்து விளையாட வேண்டும். ஆனால் பாபர் அணியின் சூழலை கெடுக்கிறார் என்று நினைக்கின்றேன்.

அணியை அவர் கட்டமைக்க வில்லை. இந்த உலகக் கோப்பை முடியட்டும் அதன் பிறகு நான் சில விஷயங்களை வெளிப்படையாக பேசுகின்றேன். நான் ஷாகின் அப்ரிடி குறித்து ஏதேனும் பேசினால் நான் என்னுடைய மருமகனுக்கு சாதகமாக பேசுகிறேன் என்று சொல்வார்கள் என்று கூறியுள்ளார். பாகிஸ்தான் இனி அடுத்து விளையாட போகும் இரண்டு போட்டிகளும் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும். அது மட்டுமல்லாமல் இந்தியா, அமெரிக்காவையும். அயர்லாந்து அணி அமெரிக்காவையும் வீழ்த்தினால் மட்டுமே பாகிஸ்தான் அடுத்து சுற்றுக்கு செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, June 10, 2024, 18:35 [IST]
Other articles published on Jun 10, 2024
English summary
Ind vs Pak t20 world cup - Salim malik accusing Imad wasim as he deliberately wasted the balls
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+