Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாகிஸ்தான் வென்றுவிடும் என நினைத்து, யுவராஜ் என்னை வாழ்த்தினார்! கடைசியில் நடந்தது வேறு-ஆப்ரிடி கலகல

நியூயார்க் : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் ரசிகர்களை உற்சாகத்தின் எல்லைக்கு கொண்டு சென்று இருக்கிறது. இதற்கு காரணம் 120 ரன்கள் என்ற இலக்கை பாகிஸ்தானுக்கு இந்தியா நினைத்தபோது பெரும்பாலான இந்திய ரசிகர்கள் போட்டியை பார்க்காமல் டிவியை ஆப் செய்து இருப்பார்கள்.

ஆனால் காலையில் எழுந்து பார்த்தவுடன் நிச்சயம் அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருக்கும். ஏனென்றால் இந்த 120 என்ற இலக்கை கூட எட்ட முடியாமல் பாகிஸ்தான அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

t20 world cup ind vs pak mohammed siraj hardik pandya rohit sharma virat kohli indian national cricket team cricket 20 2024

இந்த நிலையில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு சிறப்பு தூதர்களாக முன்னாள் வீரர்கள் யுவராஜ் சிங், அப்ரிடி ஆகியோர் நியமிக்கப்பட்டார்கள். இருவரும் நியூயார்க்கில் இந்த போட்டியை பார்த்து இருக்கிறார்கள். இந்த போட்டி முடிந்தவுடன் யுவராஜூம், ஆப்ரிடியும் வீடியோ ஒன்றில் பேசி இருக்கிறார்கள்.

அதில் வெற்றிக்கு 40 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் யுவராஜ் என்னிடம் வாழ்த்துக்கள் அப்ரிடி, நான் ஹோட்டலுக்கு கிளம்புகிறேன். எஞ்சிய போட்டியை நான் பார்க்க மாட்டேன் என்று கூறினார். அதற்கு நான் என்னை இவ்வளவு சீக்கிரம் வாழ்த்தாதீர்கள். ஏனென்றால் 40 ரன்கள் என்பது இந்த ஆடுகளத்தில் எட்டுவது மிகவும் கடினம் என்று கூறினேன்.

இதை தொடர்ந்து ஏன் சோகமாக இருக்கிறீர்கள் என்று போட்டி முடிந்தவுடன் யுவராஜ் சிங் என்னிடம் கேட்டார். அதற்கு நான் சோகமாக இருப்பது சரியா? தவறா? என்றேன். இது நாங்கள் தோற்க வேண்டிய போட்டியா இது என்று அப்ரிடி கேட்டார். இதற்கு பதில் அளித்த யுவராஜ், நான் பாகிஸ்தான் வெற்றி பெறும் என்று ஆப்ரிடியிடம் கூறி இருந்தேன்.

ஆனால் என் மனதிற்குள் இந்தியா வெற்றி பெற்று விடும் என்று நம்பிக்கை கொஞ்சம் இருந்தது. வெற்றியும், தோல்வியும் கிரிக்கெட் போட்டியில் ஒரு அங்கம் தான். நாம் தொடர்ந்து உத்வேகத்துடன் விளையாடுவது தான் முக்கியம் என்று யுவராஜ் கூறினார்ம் யுவராஜ், ஆப்ரிடி பேசிக்கொண்டிருந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.

Story first published: Wednesday, June 12, 2024, 7:27 [IST]
Other articles published on Jun 12, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+