Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

PM XI vs IND- முதல் போட்டியிலேயே ரோகித் சர்மா ஏமாற்றம்.. ஒரு பந்தை கூட தொட முடியாமல் அவுட்

மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா பங்கேற்கவில்லை.

ரோகித் சர்மா தற்போது தான் ஆஸ்திரேலியாவுக்கு வந்திருக்கிறார். இந்த சூழலில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பகல் இரவு டெஸ்ட் போட்டியில் வரும் டிசம்பர் 6ஆம் தேதி விளையாடுகிறது.

pm xi vs ind rohit sharma ind vs aus border gavaskar trophy

இந்த போட்டிக்கு தயாராகும் விதமாக இந்திய அணி ஆஸ்திரேலிய பிரதமர் 11 அணியுடன் இரண்டு நாள் பயிற்சி ஆட்டத்தில் பிங்க் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்த போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா இடம்பெற்றிருந்தால் ரோகித் சர்மா கடந்த சில போட்டிகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறி வருகிறார். ரோகித் சர்மா கடந்த நியூசிலாந்துக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளில் ரோகித் சர்மா 91 ரன்கள் தான் எடுத்திருந்தார்.

இந்த நிலையில் ரோகித் சர்மா இந்திய அணியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வந்தனர். ரோகித் சர்மாவுக்கு பதில் பும்ராவை கேப்டனாக தொடர வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த நிலையில் தமக்கு எதிராக எழும் விமர்சனங்களுக்கு ரோகித் சர்மா இன்றைய ஆட்டத்தில் பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஆஸ்திரேலியா அணியின் இரண்டாம் தர வீரர்களுடன் தான் இந்த போட்டி நடைபெற்றது. இதில் கூட ரோஹித் சர்மா பேட்டிங்கில் சாதிக்கவில்லை. வெறும் 11 பந்துகளை மட்டுமே ரோகித் சர்மா எதிர்கொண்டார். இதில் அவர் மொத்தமாக அடித்த ரன்களை மூன்று தான். ஆஸ்திரேலிய வீரர்கள் பந்துவீச்சை தொட கூட முடியாமல் ரோகித் சர்மா தடுமாறினார்.

இதனால் ரோகித் சர்மா இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சேர்க்கக்கூடாது என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இன்னும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு ஐந்து நாட்கள் தான் இருக்கிறது. இதில் ரோகித் சர்மா தனது பார்மை எட்ட வாய்ப்பே இல்லை என்பதால் அவரை அணில் இருந்து நீக்க வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Story first published: Sunday, December 1, 2024, 15:38 [IST]
Other articles published on Dec 1, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+