IND vs SA 1st ODI - ரிங்கு சிங்கிற்கு வாய்ப்பு கிடைக்காதது ஏன்? காரணமே இதான்.. டிராவிட் போட்ட கணக்கு
ஜோகனஸ்பர்க் : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி ஜோகானஸ்பர்க் நகரில் இன்று விளையாடி வருகிறது. இந்த போட்டிக்கான பிளையிங் லெவன் அறிவிக்கப்பட்டது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இடதுகை பேட்ஸ்மேன் ரிங்கு சிங் பிளேயிங் லெவனின் இடம்பெறாதது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.
டி20 கிரிக்கெட்டில் ரிங்கு சிங் பட்டையை கிளப்பி இருக்கிறார். தமக்கு கிடைத்த வாய்ப்பை அவர் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார். இந்த நிலையில் ஒரு நாள் போட்டியில் இந்தியா ஒரு சரியான ஃபினிஷர் இல்லாமல் தடுமாறி வருகிறது.

உலகக் கோப்பை தொடரில் சூரியகுமார் யாவும் பினிஷராக பயன்படுத்தப்பட்டார். ஆனால் அவருக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் சுத்தமாக விளையாட தெரியவில்லை இந்த நிலையில் டி20 யில் கலக்கிய ரிங்கு சிங்கை ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அந்த இடத்திற்கு பயன்படுத்த வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
இதனால் இன்றைய ஆட்டத்தில் ரிங்கு சிங்கிற்கு வாய்ப்பு தராமல் போனது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்திருக்கிறது. இந்த நிலையில் இதற்கு பின்னால் ஒரு காரணம் இருப்பதாக தெரிகிறது. ஸ்ரேயாஸ் டி20 தொடரில் விளையாடாததால் அவருக்கு ஒரு நாள் கிரிக்கெட்டில் முன்னுரிமை அளிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் தென்னாப்பிரிக்கா மண்ணில் பார்ட் டைம் பவுலர்களின் பங்கு மிகவும் முக்கியம். ஏனென்றால் ஏய்டன் மார்க்கரம் போன்ற வீரர்கள் தென்னாப்பிரிக்கா ஆடுகளங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறார்.
மேலும் இந்திய அணியில் பந்துவீச்சு தெரிந்த பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் முன்பு இல்லை. ஆனால் தற்போது சாய் சுதர்சன் மற்றும் திலக் வர்மா ஆகியோர் சுழற்பந்து வீசுகிறார்கள். இதனால் அவர்களை பார்ட் டைம் பவுலராக பயன்படுத்திக் கொள்வதற்காக தான் இவ்விருவருக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டிருக்கிறது.
இதேபோன்று டெஸ்ட் தொடருக்கு தயாராகும் விதமாக ஸ்ரேயாஸ் அடுத்த இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்ரேயாஸுக்கு பதில் ரஜட் பட்டிதார் அல்லது ரிங்கு சிங் அணிக்கு திரும்பலாம் என தெரிகிறது. பார்ட் டைம் பவுலருக்காக தான் ரிங்கு சிங்கை தற்போது டிராவிட் வெளியே அமர வைத்திருக்கிறார்.
Story first published: Sunday, December 17, 2023, 14:10 [IST]
Other articles published on Dec 17, 2023


Click it and Unblock the Notifications