3 ரன்னுக்கு 2 விக்கெட்.. 2 பேர் டக்! தென்னாப்பிரிக்காவை தெறிக்கவிட்ட இந்தியா.. வேற லெவல் செய்கை
ஜோபனஸ்பர்க் : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வீரர்கள் அபாரமாக பந்து வீசி வருவதால் அந்த அணி மூன்று ரன் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
டி20 தொடர் சமனான நிலையில் தற்போது ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

டி20 போட்டி நடைபெற்ற அதே ஆடுகளத்தில் தான் இந்த போட்டியும் நடைபெறுகிறது. இதனால் முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு சாதகமான சூழல் நிலவியது. இதனால் முதலில் பேட்டிங் செய்து அதிக ரன்கள் குவித்து இந்தியாவை தடுமாற வைக்கலாம் என்று தென்னாப்பிரிக்கா கணக்கு போட்டது. மேலும் உலகக்கோப்பை தொடரில் இடம் பெற்றிருந்த எந்த ஒரு பவுலரும் இந்த ஆட்டத்தில் இல்லை.
முற்றிலும் இளைஞர்களை கொண்ட அணியையே வைத்து இந்தியா களமிறங்கியது. ஆனால் யாருமே எதிர்பாராத விதமாக முதல் ஓவரிலே இந்திய வீரர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். முதல் ஓவர் வீசிய முகேஷ் குமார் ஆட்டத்தின் முதல் பந்திலே யாக்கர் வீசி தென்னாப்பிரிக்க வீரர் ஹென்றிக்சை தடுமாற வைத்தார். அந்த பந்தில் ஒரே ஒரு வைட் மட்டும்தான் சென்றது.
மற்றபடி தென்னாப்பிரிக்க பேட்டில் இருந்து ஒரு ரன் கூட வரவில்லை. இதனை அடுத்து ஆட்டத்தின் இரண்டாவது ஓவரையும் வீசிய இந்திய வீரர் ஆர்ஸ்தீப் சிங் கட்டுக்கோப்பாக பந்து வீசி தென்னாப்பிரிக்காவை நடுங்க வைத்தார். அந்த ஓவரின் நான்காவது பந்தில் தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் ஹென்றிக்ஸ் போல்ட் ஆக்கினார்.
இதனை அடுத்து அடுத்த பந்தில் களம் இறங்கிய தென்னாப்பிரிக்கா வீரர் ராஸி வெண்டர் டுசன், ஆர்ஸ்தீப் பந்தில் கோல்டன் டக் ஆகி வெளியேறினார். இதன் மூலம் ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகள் விழுந்தது. இதை அடுத்து ஹாட்ரிக் சாதனையை ஆர்ஸ்தீப் நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த பந்தில் ரன் ஏதும் போகவில்லை. இதன் மூலம் தென்னாப்பிரிக்க அணி மூன்று ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
Story first published: Sunday, December 17, 2023, 14:20 [IST]
Other articles published on Dec 17, 2023


Click it and Unblock the Notifications