ராஞ்சி: இந்தியா, தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நவம்பர் 30ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ராஞ்சியில் நடைபெறுகிறது. டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் படுதோல்வியை தழுவிய நிலையில் தற்போது மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கின்றது.
இதில் நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் ஒரு மாதத்திற்கு பின்பு சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கு திரும்புவதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் கேப்டன் கில் காயம் காரணமாக இந்த தொடரிலும் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனால் கேஎல் ராகுல் இந்திய அணியின் கேப்டனாக செயல்படுவார். இந்த தருணத்தில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம். கில் இல்லாததால் ரோகித் சர்மாவுக்கு ஜோடியாக யார் விளையாடுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கம்பீர் எப்பொழுதுமே இடது கை, வலது கை காம்பினேஷனுக்கு முக்கியத்துவம் கொடுப்பார் என்பதால் ஜெய்ஸ்வாலுக்கு அந்த வாய்ப்பு தரப்படலாம். ஆனால் ருதுராஜ் நல்ல பார்மில் இருக்கின்றார். இதனால் அவரும் போட்டியில் இருக்கின்றார். மூன்றாவது வீரராக விராட் கோலி தன்னுடைய இடத்தை பூர்த்தி செய்வார்.
இதேபோன்று ஸ்ரேயாஸ் இல்லாததால் நான்காவது இடத்தில் ராகுல் விளையாட அதிக வாய்ப்பு உள்ளது. ஐந்தாவது இடத்தில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட் விளையாடக்கூடும். ஆறாவது இடத்தில் ஆல்ரவுண்டர் ஜடேஜாவும், ஏழாவது இடத்தில் வாஷிங்டன் சுந்தரும் விளையாடுவார்கள்.
எட்டாவது இடத்தில் ஹர்ஷித் ராணா, ஒன்பதாவது இடத்தில் ஆர்ஸ்தீப் சிங், பத்தாவது இடத்தில் பிரசித் கிருஷ்ணாவும் இடம்பெறுவார்கள்.பிரத்யேக சுழற் பந்துவீச்சாளராக குல்தீப் யாதவ் இடம்பெறுவார். இல்லையெனில் ஆல்ரவுண்டர் வேகப்பந்துவீச்சாளராக நிதிஷ்குமார் ரெட்டி இடம் பெற கூடும்.இந்திய அணி பிளேயிங் XI: ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட், ஜடேஜா, வாசிங்டன் சுந்தர்/ நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்சித் ராணா, ஆர்ஸ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ்