இஷான் கிஷன் கொடுத்த பளார்.. செய்தியாளர் சந்திப்பில் நடந்த விசயம்.. என்னால் எப்படி கேட்க முடியும்?
டெல்லி: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவினாலும், இஷான் கிஷனின் ஆட்டம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
அவ்வளவு ஏன், எதிரணி கேப்டன் பெவுமாவே , சிறப்பாக விளையாடி நெருக்கடி அளித்தார் என்று இஷான் கிஷனுக்கு பாராட்டு தெரிவித்தார்.
இந்த நிலையில், இஷான் கிஷனால் ராகுலுக்கும், ரோகித் சர்மாவுக்கும் ஆபத்து காத்திருப்பதாக விமர்சகர்கள் தங்கள் கருத்தை முன்வைத்தனர்.

கேட்க முடியாது
இந்த நிலையில், போட்டிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த இஷான் கிஷனிடம் , தொடக்க வீரர்கள் குறித்து கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதில் அளித்த இஷான் கிஷன், கேஎல் ராகுலும், ரோகித் சர்மாவும் உலகத்தர வீரர்கள். அவர்கள் அணியில் இருக்கும் போது, எனக்கு இடம் தாருங்கள் என கேட்க முடியாது. அதனால் பயிற்சியின் போது நான் கடுமையாக உழைக்க வேண்டும்.

அவங்களை நீக்கிவிடுங்கள்
எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம் எனது திறமையை நான் நிரூபித்து அணிக்காக வெற்றியை தேடி தர வேண்டும். இதனால் வழிமுறைகளில் தான் இப்போது கவனம் செலுத்தி வருகிறேன். அவர்கள் இருவரும் நாட்டுக்காக பல சாதனைகளை செய்துள்ளனர். அதிக ரன்களை விளாசியுள்ளனர். அப்படி இருக்கும் போது, ரோகித் அல்லது ராகுலை நீக்கிவிட்டு எனக்கு பிளேயிங் லெவனில் இடம் கொடுங்கள் என கேட்க முடியாது.
Recommended Video

தேர்வுக்குழுவினர் கையில்..
அதே சமயம் என் வேலையை நான் சரியாக செய்வேன். நான் அணியில் இருக்கனுமா, வேண்டாமா என்பதை தேர்வுக்குழுவினர்களும், பயிற்சியாளர்களும் தான் முடிவு செய்ய வேண்டும். என் வேலையை நான் சரியாக செய்ய வேண்டும் என நினைக்கிறேன், பிளேயிங் லெவன் குறித்து இப்போது யோசிக்கவில்லை என்று கேள்வி கேட்ட நிருபர்களுக்கு பளார் என்று அறைந்தது போல் பதில் அளித்தார்.

தோல்விக்கு காரணம்
இந்திய அணியின் தோல்வி குறித்து பேசிய இஷான் கிஷன், நாங்கள் என்ன தவறு செய்தோம் என்பதை கண்டறிந்து, அது குறித்து பயிற்சி செய்ய போகிறோம். இந்த வீரரால் தான் தோற்றோம் என்று கூறாமல், ஒரு அணியாக இணைந்த வெல்வோம், அணியாக தோற்போம் என்று இஷான் கிஷன் கூறினார். 2வது டி20 போட்டி கட்டாக்கில் வரும் ஞாயிற்றுகிழமை நடைபெறுகிறது.


Click it and Unblock the Notifications