Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

7 மாதங்களில் 4 முறை.. கே.எல்.ராகுல் மீது கடுப்பில் உள்ள பிசிசிஐ.. அப்படி என்னதான் பிரச்சினை!!

டெல்லி: இந்திய அணியில் கே.எல்.ராகுலின் காயம் மட்டும் தற்போது ரசிகர்களிடையே மர்மத்தை கிளப்பியுள்ளது.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் இன்று தொடங்குகிறது.

இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வரும் சூழலில் ப்ளேயிங் 11ம் இறுதி செய்யப்பட்டிருந்தது.

கே.எல்.ராகுல் விலகல்

கே.எல்.ராகுல் விலகல்

இந்நிலையில் நேற்று மாலை திடீரென அதிர்ச்சி தகவல் வெளியானது. அதாவது இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுலுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் ஒட்டுமொத்த தொடரில் இருந்தும் வெளியேறுவதாகவும் அறிவிக்கப்பட்டது. பயிற்சியின் போது ராகுலுக்கு தொடை பகுதியில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ரசிகர்கள் அதிருப்தி

ரசிகர்கள் அதிருப்தி

இந்நிலையில் கே.எல்.ராகுலுக்கு இதுபோன்று நடப்பது இது முதல் முறையல்ல. கடந்த 7 மாதங்களில் தற்போது 4வது முறையாக காயத்தால் ஒரு தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். இந்திய அணியின் அடுத்த கேப்டனாக பார்க்கப்படும் கே.எல்.ராகுலுக்கு, இந்த தென்னாப்பிரிக்க தொடர் தான் கடைசி வாய்ப்பாக இருந்தது. ஆனால் அடிக்கடி காயத்தால் பாதித்து, நம்பிக்கை வைக்க முடியாத வீரராக கே.எல்.ராகுலின் பெயர் இடம் பெற்றுள்ளது.

பிசிசிஐ-ன் முடிவு என்ன

பிசிசிஐ-ன் முடிவு என்ன

இதுகுறித்து பேசியுள்ள பிசிசிஐ அதிகாரி ஒருவர், காயம் என்பது ஒரு வீரரின் வாழ்கையில் சகஜமான ஒன்று தான். ஆனால் அதை எப்படி கவனமாக கையாண்டு, அடிக்கடி காயம் ஏற்படாமல் ஃபிட்டாக இருக்கிறார்கள் என்பது முக்கியம். கே.எல்.ராகுல் போன்ற முக்கியமான வீரர்கள், இப்படி அடிக்கடி பாதிக்கப்படுவது சரியானதாக தெரியவில்லை. அவர் பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு வந்தவுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என அதிகாரி கூறியுள்ளார்.

Recommended Video

IND vs SA 1st T20-யின் Predicted Playing 11 என்ன? Aanee's Appeal | *Cricket | OneIndia Tamil
இதற்கு முந்தைய காயங்கள்

இதற்கு முந்தைய காயங்கள்

நவம்பர் 2021 - தொடைப்பகுதி பிடிப்பு காரணமாக நியூசிலாந்துடனான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார்.

ஃபிப்ரவரி 2022 - தசைப்பிடிப்பு காரணமாக வெஸ்ட் இண்டீஸுடனான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இருந்து வெளியேறினார்.

ஃபிப்ரவரி - மார்ச் 2022 - தசைப்பிடிப்பு காரணமாக இலங்கையுடனான டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார்.

ஜூன் 2022 - தற்போது தொடைப்பகுதி பிடிப்பு காரணமாக தென்னாப்பிரிக்க தொடரில் இருந்து வெளியேறியுள்ளார்.

Story first published: Thursday, June 9, 2022, 17:07 [IST]
Other articles published on Jun 9, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+