Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணி கேப்டனாக முதல் போட்டி.. ரிஷப் பண்ட் முன் காத்திருக்கும் சவால்கள்.. வெற்றி பெறுவாரா பண்ட்

டெல்லி: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் காயம் காரணமாக ராகுல் விலகியதால் , இந்திய அணி கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன் மூலம், இந்திய டி20 அணி வரலாற்றில், கேப்டன் பதவியை ஏற்கும் 2வது இளம் வீரர் என்ற பெருமையை பண்ட் பெற்றார். முதல் இடத்தில் ரெய்னா உள்ளார்.

ரெய்னா 23 வயதில் கேப்டன் பொறுப்பை ஏற்றார். கேப்டனாக ரிஷப் பண்ட் முன் காத்திருக்கும் சவால்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.

ஃபில்டிங் யுத்தி

ஃபில்டிங் யுத்தி

பொதுவாக விக்கெட் கீப்பர் தான் உண்மையான கேப்டன், ஏன் என்றால் அவருக்கு தான் மைதானத்தில் யார் எங்கு நிற்கிறார், ஃபில்டிங் கோணங்கள் சரியாக இருக்கிறதா என்பது பற்றி தெரியும் என்று தோனி கூறி இருக்கிறார். தற்போது அந்த பொறுப்பை ரிஷப் பண்ட் சரியாக செய்ய வேண்டும். போட்டிகளுக்கான சூழலுக்கு எற்ப எந்த வீரரை, எந்த இடத்தில் நிற்க வைக்க வேண்டும் என்ற யுத்திகளை வகுக்க வேண்டும்.

ரன் குவிக்கும் சவால்

ரன் குவிக்கும் சவால்

இதே போன்று ரிஷப் பண்ட் இந்திய அணியின் முக்கியமான பேட்ஸ்மேன், கேப்டன் பொறுப்பு வந்தால் அழுத்தம் எற்பட்டு, அது பேட்டிங்கை பாதிக்கும். ஆனால் சில வீரர்கள் கேப்டன் பதவியை ஏற்றதும், கூடுதல் பொறுப்பு ஏற்பட்டு அணிக்காக விளையாடி ரன் குவித்து தோனி, கோலி போல் அணிக்கு வெற்றியை தேடி தருவார்கள். இதில் ரிஷப் பண்ட் எந்த வகை என்று இன்று தெரிந்துவிடும். இந்த சவாலில் வென்றாலே, கேப்டனுக்கான டெஸ்டில் பாஸ் மார்க் வாங்கிவிட்டார் என்றே அர்த்தம்.

ரிக்கி பாண்டிங் மாணவன்

ரிக்கி பாண்டிங் மாணவன்

ரிஷப் பண்ட்க்கு இருக்கும் மற்ற பெரிய சவாலே, சூழலுக்கு ஏற்ப பந்துவீச்சாளர்களை பந்துவீச அழைப்பது தான். இதில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் பாண்டிங் வல்லவர். அவருடைய பட்டறையில் தற்போது ரிஷப் பண்ட் ஐபில் மூலம் பட்டை தீட்டப்பட்டு இருக்கிறார். இதனால், எந்த வீரர்களை எந்த சூழலில் பந்துவீச அழைப்பது என்பதை முடிவு செய்வது ரிஷப் பண்ட்க்கு சவாலாக இருக்கும்.

Recommended Video

IPL 2022: Sanga's Cricket Wrap | Rahul Dravid About Umran Malik | IND vs SA *CricketWrap
டிஆர்எஸ் சொதப்பிய பண்ட்

டிஆர்எஸ் சொதப்பிய பண்ட்

ஒரு கேப்டனுடைய தலையான கடமையே, களத்துக்கும், எதிரணிக்கும் ஏற்ப சரியான 11 வீரரை பிளேயிங் லெவனில் சேர்ப்பது தான். அந்த வகையில் ரிஷப் பண்ட்க்கு மற்றொரு சவால் காத்திருக்கிறது. மேலும், ரிஷப் பண்ட் , டி.ஆர்.எஸ். முடிவை எடுப்பதில் சொதப்பி கொண்டே இருக்கிறார். ரிஷப் பண்ட் எடுத்த ஒரு தவறான முடிவால் டெல்லி அணியின் பிளே ஆப் கனவே பறிபோனது. அந்த தவறிலிருந்து பாடம் கற்று கொண்டு ரிஷப் பண்ட் சிறப்பாக செயல்படுவார் என நம்புவோம்.

Story first published: Thursday, June 9, 2022, 16:49 [IST]
Other articles published on Jun 9, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+