Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தென்னாப்பிரிக்காவுக்கு பதிலடி தருமா இந்தியா..? புதிய திட்டத்தை வகுத்துள்ள டிராவிட்.. பிளேயிங் XI இதோ

கட்டாக்: இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி கட்டாக் நகரில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

இந்திய அணி முதல் டி20 போட்டியில் மோசமான பந்துவீச்சு காரணமாக தோல்வியை தழுவியது. இந்த நிலையில் 2வது டி20 போட்டியில் பதிலடி தரும் முனைப்புடன் இந்தியா களமிறங்குகிறது.

தென்னாப்பிரிக்காவை சமாளிக்க இந்தியா அணி புதிய திட்டத்தை வகுத்துள்ளது, இது குறித்து விரிவாக காண்போம்.

பண்ட் மீதான விமர்சனம்

பண்ட் மீதான விமர்சனம்

இந்திய அணி 211 ரன்களை அடித்தும் தோற்றுவிட்டது என்றால் ஒட்டுமொத்தமாக பந்துவீச்சாளர்கள் சொதப்பியது தான் காரணம். ஆனால், அதே சமயம், கேப்டன் ரிஷப் பண்டும் பந்துவீச்சாளர்களை சரி வர பயன்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் முன் வைக்கப்படுகிறது. கட்டாக் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான மைதானம். அங்கு அடிக்கப்பட்ட சராசரி ஸ்கோரே 135 ரன்கள் தான்.

சுழற்பந்துவீச்சு அட்டாக்

சுழற்பந்துவீச்சு அட்டாக்

இதனால் தென்னாப்பிரிக்காவை சமாளிக்க சுழற்பந்துவீச்சு கொண்ட அட்டாக்கை இந்தியா பயன்படுத்த உள்ளது. முதல் டி20 போட்டியில் சாஹலுக்கு 2 ஓவர் மட்டுமே தந்தார். அதே போன்று ஹர்திக் பாண்டியாவுக்கும் ரிஷப் பண்ட் ஒரு ஓவர் மட்டுமே தந்தார். இதனால், இருக்கின்ற 6 பந்துவீச்சாளர்களை எப்படி பந்துவீசுவது என்றும், கில்லர் மில்லர் மற்றும் வெண்டர் டூசனை சமாளிக்க யுத்திகளும் வகுக்கப்பட்டுள்ளன.

உம்ரான் மாலிக்

உம்ரான் மாலிக்

இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கியுள்ள ருத்துராஜ் கெய்க்வாட், அதிரடியாக விளையாட தொடங்கினாலும் 20, 30 ரன்களில் ஆட்டமிழந்து விடுகிறார். இதனால் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்டித கொண்டு பெரிய ஸ்கோரை அடிக்க வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளார். இன்றைய ஆட்டத்தில் உம்ரான் மாலிக்கிற்கு வாய்ப்பு தரப்படாது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

IND vs SA 2nd T20 போட்டியில் பதிலடி கொடுக்குமா India? Predicted Playing XI *Cricket
பிளேயிங் லெவன்

பிளேயிங் லெவன்

இந்திய அணி 1, ருத்துராஜ், 2, இஷான் கிஷன். 3. ஸ்ரேயாஸ் ஐயர். 4. ரிஷப் பண்ட். 5. ஹர்திக் பாண்டியா, 6. தினேஷ் கார்த்திக். 7. அக்சர் பட்டேல். 8. ஹர்சல் பட்டேல். 9. புவனேஸ்வர் குமார். 10. சாஹல். 11 அவேஷ் கான்

தென்னாப்பிரிக்க அணி 1, குயின்டன் டி காக், 2. பெவுமா, 3. வெண்டர் டுசன், 4. டேவிட் மில்லர். 5. ஸ்டம்ஸ். 6. பெர்னல். 7. பிரிட்டோரியஸ். 8. கேசவ் மகாராஜ். 9. ஷாம்சி. 10. ரபாடா. 11. நோக்கியா

Story first published: Sunday, June 12, 2022, 10:11 [IST]
Other articles published on Jun 12, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+