கேப் டவுன்: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர்கள் 11 பந்துகளில் 6 விக்கெட்டுகளை இழந்த போது நடிகை அனுஷ்கா சர்மா மற்றும் ஆதியா ஷெட்டி இருவரும் வாயடைந்து சோகத்தில் அமர்ந்திருந்த புகைப்படங்கள் ட்ரெண்டாகி வருகின்றன.
கேப் டவுன் மைதானத்தில் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி தொடங்கியுள்ளது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 55 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணி தரப்பில் வேகப்பந்துவீச்சாளர் சிராஜ் 6 விக்கெட்டுகளையும், பும்ரா மற்றும் முகேஷ் குமார் இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.

இதன்பின் களமிறங்கிய இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்திருந்த நிலையில், விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் இருவரும் களத்தில் இருந்தனர். அப்போது கேஎல் ராகுல் அட்டாக் செய்ய போய் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் மூலமாக 11 பந்துகளில் ஒரு ரன் கூட சேர்க்கப்படாமல் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்தது.
இதன் காரணமாக இந்திய அணி 153 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இந்திய அணி 6 வீரர்கள் டக் அவுட்டாகி வெளியேறினர். அதுமட்டுமல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 6 வீரர்கள் டக் அவுட்டாகி வெளியேறிய புதிய சாதனையை இந்திய அணி படைத்துள்ளது. இருப்பினும் இந்திய அணி 98 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளதால் ரசிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
அதேபோல் இந்திய அணி 11 பந்துகளில் அடுத்தடுத்து 6 விக்கெட்டுகளை இழந்த போது மைதானத்தில் இருந்த இந்திய ரசிகர்கள் என்ன நடக்கிறது என்பது புரியாமல் மிரண்டு அமைதி காத்தனர். அந்த வகையில் மைதானத்தில் விராட் கோலியின் மனைவியான நடிகை அனுஷ்கா சர்மா மற்றும் கேஎல் ராகுல் மனைவியான ஆதிஷா ஷெட்டி இருவரும் ஒன்றாக அமர்ந்து போட்டியை பார்த்தனர்.
இவர்கள் இருவரும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக தென்னாப்பிரிக்கா வந்தனர். இந்திய அணி அடுத்தடுத்து 6 விக்கெட்டுகளை இழந்ததை நம்ப முடியாமல் அனுஷ்கா சர்மா மற்றும் ஆதியா ஷெட்டி இருவரும் வாயில் கை வைத்து சோகமடைந்தனர். இவர்களது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.