For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சண்டைக்கு வா..!! பும்ராவை வம்பிழுத்த தென்னாப்பிரிக்க வீரர்கள்..தப்பு பண்ணிட்ட சிங்காரம்..

ஜோகனஸ்பர்க் : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1க்கு0 என்ற கணக்கில் உள்ளது.

2வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற தென்னாப்பிரிக்க சில யுத்திகளை பயன்படுத்தி வருகிறது.

குறிப்பாக ஷாட் பால்களை வீசுவது, அதனை அடிக்க முடியவில்லை என்றால் வீரர்களை வெறுப்பேற்றுவது போன்ற செயல்களில் தென்னாப்பிரிக்க வீரர்கள் ஈடுபடுகின்றனர்.

Ind vs SA 2nd Test Bumrah was sledged by SA Players while batting

அதிரடி வீரர் ரிஷப் பண்டையும் இப்படி தான் ஷாட் பந்துகளை வீசி டக் அவுட்டாக்கினர். இதே போன்று பும்ரா பேட்டிங் செய்ய வந்த போது, அவருக்கும் ஷாட் பால் வீசப்பட்டது. பும்ராவுக்கு காயத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பந்துகளை தென்னாப்பிரிக்க வீரர்கள் வீசினர். இதனால் பும்ரா கடுப்பாகி சிக்சர் விளாசினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளரும், மும்பை இந்தியன்ஸ் வீரருமான மார்கோ ஜென்சன், பும்ராவிடம் சண்டைக்கு வா என்பது போல் பேசினார். பும்ராவும் அதற்கு வாயாலே பதிலடி தந்தார். உடனே நடுவர்கள் இருவரையும் சமதானப்படுத்தி அழைத்து சென்றனர்.

Recommended Video

IND vs SA 1st Test Day 4: Kohli's men set Proteas 305-run target | OneIndia Tamil

பும்ரா 7 ரன்களில் ஆட்டமிழந்தவுடன் தென்னாப்பிரிக்க வீரர்கள் உற்சாகமாக கொண்டாடினர். இதனால் கடும் கோபத்தில் உள்ள பும்ரா, பந்துவீச்சில் தக்க பதிலடி தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது, இந்தியா இந்தப் போட்டியை வென்று ஆக வேண்டும் என்றால் பும்ரா, முகமது ஷமி விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, January 5, 2022, 19:00 [IST]
Other articles published on Jan 5, 2022
English summary
Ind vs SA 2nd Test Bumrah was sledged by SA Players while batting சண்டைக்கு வா..!! பும்ராவை வம்பிழுத்த தென்னாப்பிரிக்க வீரர்கள்..
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+