Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA: இந்தியா பவுலிங்கில் செய்யும் தவறு.. விக்கெட் கிடைக்காததற்கு இதுவே காரணம்-ஸ்டெயின் கருத்து

கவுஹாத்தி: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விக்கெட்டுகளை எடுக்க கடுமையாக போராடி வருகிறது. இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இந்தியா தோல்வியை தழுவிய நிலையில் இரண்டாவது போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருக்கிறது.

இந்த தருணத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தென்னாப்பிரிக்க அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் இரண்டாவது நாள் ஆட்டத்தை தென்னாப்பிரிக்க அணியின் சேனுரான் முத்துசாமி மற்றும் வெர்ரையன் ஆகியோர் தொடங்கினர்.

Ind vs sa

இந்த ஜோடி இன்றைய நாள் தொடக்கத்தில் இருந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தது. முதல் ஸ்செஷன் முழுவதும் விக்கெட்டுகள் விழாமல் இந்த ஜோடி கடந்தது. தற்போது தென்னாப்பிரிக்காவின் ஸ்கோர் 300 ரன்கள் தாண்டி சென்று கொண்டிருக்கிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்டெயின், இந்திய பவுலர்கள் தங்களது யுத்தியில் ஒரு தவறு செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து பேசிய அவர், இன்றைய நாள் ஆட்டத்தில் நான் இந்திய வீரர்கள் ஒரு தவறை செய்வதாக பார்க்கின்றேன். பும்ரா உள்ளிட்ட அனைத்து வீரர்களுமே தென்னாபிரிக்க பேட்ஸ்மேன்களுக்கு ஸ்டெம்பை நோக்கியே பந்து வீசி கொண்டு இருக்கிறார்கள்.

ஒரு பந்து கூட ஸ்டெம்புக்கு வெளியே செல்லவில்லை. இதன் மூலம் lbw கிடைக்கும் என்று இந்திய பவுலர்கள் நினைக்கிறார்கள். ஆனால் இது போன்ற ஒரு பந்துவீச்சு ஸ்டைல் கொல்கத்தா ஆடுகளத்திற்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம். இந்த ஆடுகளம் டெஸ்ட் போட்டிக்கான சிறந்த ஆடுகளம்.

இங்கு அனைத்து பந்துகளையும் ஸ்டெம்புக்கு நேராக வீச வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு பதில் ஆப் ஸ்டம்பிற்கு வெளியேவும் பந்தை வீசலாம். இதன் மூலம் சிலிப் பில்டர்களை நாம் விளையாட்டுக்குள் கொண்டுவர முடியும். தற்போது ஸ்லிப் ஃபீல்டர்கள் சும்மாதான் நிற்கிறார்கள். அனைத்து பவுலர்களும் ஸ்டெம்பை நோக்கி வீசுகிறார்கள்.

இந்த பந்துகளை எல்லாம் தென்னாப்பிரிக்க வீரர்கள் அதனை நன்றாக எதிர்கொண்டு வருகிறார்கள். அதற்காக நான் ஸ்டெம்பை நோக்கி பந்து வீசவே கூடாது என்று சொல்லவில்லை. ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு பந்துகளை சர்ப்ரைஸாக உள்ளே கொண்டு வரலாம். ஆனால் இந்தியா இன்று காலையிலிருந்து அனைத்து பந்துகளையும் ஸ்டெம்பை நோக்கி வீசிக்கொண்டிருக்கிறது என்று ஸ்டெயின் கூறியுள்ளார்.

Story first published: Sunday, November 23, 2025, 12:17 [IST]
Other articles published on Nov 23, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+