Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA : அடேய்.. ஒரு காபி குடிக்கிறதுக்குள்ள ஆல் அவுட்டா.. இந்திய அணியை பொளக்கும் வெறித்தன மீம்ஸ்

நியூலாண்ட்ஸ்: இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டத்தின் சுவாரஸ்யங்களை வைத்து ரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.

நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ரன்கள் ரன்கள் எடுத்து கம்பீரமாக இருந்த நிலையில், திடீரென ஒரு ரன் கூட எடுக்க முடியாமல் 6 விக்கெட்டுகளும் இழந்தது. இதனால் 153 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்டாகியது. தமிழ்ப் படம் முதல் பாகத்தில் நாயகி காபி கொண்டு வருவதற்குள் ஏழையாக இருக்கும் சிவா, ஒரு அரசாங்கத்தையே நடத்தும் அளவிற்கு உயர்வதாக காட்சிகள் வரும். அதனை ஒப்பிட்டு "ஒரு காபி வருவதற்கு ஆல் அவுட்டானது எப்படி" என்று புரியாமல் இருப்பதை போல் உருவாக்கப்பட்டுள்ள மீம் வேற லெவல்.

IND vs SA 2nd TEST : Fantastic Memes from Social Media after India Scored 153 for 4 to 153 all out in the 2nd Test against South Africa at Cape town

தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்கின் போது இந்திய அணியின் முகமது சிராஜ் தொடர்ச்சியாக 9 ஓவர்களை வீசி 15 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால் தென்னாப்பிரிக்கா அணி சொந்த மண்ணில் வெறும் 55 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனை ஜவான் படத்தில் அமைச்சரை கடத்தும் காட்சியில் எண்ட்ரி கொடுக்கும் ஷாரூக் கானை போல் சிராஜ் எண்ட்ரி கொடுத்து தென்னாப்பிரிக்காவை ஒட்டு மொத்தமாக பாடுபடுத்திவிட்டதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் மிரட்டல் ரகம்.

IND vs SA 2nd TEST : Fantastic Memes from Social Media after India Scored 153 for 4 to 153 all out in the 2nd Test against South Africa at Cape town

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒரு ரன் கூட சேர்க்காமல் 6 விக்கெட்டுகளை இழந்த அணி என்ற மோசமான சாதனையை படைத்துள்ளது இந்திய அணி. 153 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த போது, அடுத்த 11 பந்துகளில் 6 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. ரபாடா, இங்கிடி மற்றும் பர்கர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனை பெரோ நாயுடன் ஒப்பிட்டு இந்திய அணி வீரர்கள் புதருக்குள் மறைவது போல் உருவாக்கப்பட்டுள்ள மீம் உச்சக்கட்ட காமெடி.

IND vs SA 2nd TEST : Fantastic Memes from Social Media after India Scored 153 for 4 to 153 all out in the 2nd Test against South Africa at Cape town

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் 2வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. முதல் நாளிலேயே 2வது இன்னிங்ஸ் தொடங்கப்பட்ட நிலையில், 2வது நாளில் ஆட்டமே முடிவடையும் நிலை உருவாகியுள்ளது.

IND vs SA 2nd TEST : Fantastic Memes from Social Media after India Scored 153 for 4 to 153 all out in the 2nd Test against South Africa at Cape town

இதனை வெடி படத்தில் விவேக்கை குனிய வைத்து தலைமையில் தேங்காய் உடைக்கும் காட்சியை ஒப்பிட்டு நியூலாண்ட்ஸ் மைதானம், "முதல் நாளில் 2 இன்னிங்ஸ் முடிஞ்சது.. 2வது நாள் ஆட்டத்தையே முடிச்சிருவோம்" என்று இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா பேட்ஸ்மேன்களை பொளந்து கட்டி வருவதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் குபீர் ரகம்.

Story first published: Thursday, January 4, 2024, 11:24 [IST]
Other articles published on Jan 4, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+