Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தம்பி புதுசுல.. அதுதான் தெரியலை போல.. விராட் கோலியிடம் ஸ்லெட்ஜிங்.. பர்கரை எச்சரித்த ரவி சாஸ்திரி!

நியூலாண்ட்ஸ்: இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியை தென்னாப்பிரிக்காவின் இளம் வீரர் பர்கர் ஸ்லெட்ஜிங் செய்த போது, ரவி சாஸ்திரி கொடுத்த வர்ணனை ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது.

கேப் டவுன் மைதானத்தில் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் நாளிலேயே யாரும் எதிர்பார்க்காத வகையில் 2வது இன்னிங்ஸ் ஆட்டம் தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா அணி 55 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், இந்திய அணி 153 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

IND vs SA 2nd TEST : Ravi Shastri warns in commentary after Nandri Burger sledged Virat Kohli during the the 2nd Test at Cape Town

கடைசி 6 விக்கெட்டுகளை ஒரு ரன் கூட எடுக்காமல் இந்திய அணி இழந்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன்பின் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 62 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து களத்தில் உள்ளது. இதன் மூலம் ஒரே நாளில் இரு அணிகளிலும் சேர்த்து 23 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டுள்ளது.

இதனிடையே இந்திய அணியின் பேட்டிங்கின் போது நன்றாக ஆடி வந்த கேப்டன் ரோகித் சர்மா திடீரென 39 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் நட்சத்திர வீரர் விராட் கோலி களமிறங்கினார். அப்போது அட்டாக்கை தொடர்ந்த பர்கர், ஃபுல்லர் லெந்தில் பிட்ச் செய்து பந்தை மிடில் ஸ்டம்பை நோக்கி திருப்பினார். அதனை சிறப்பாக விராட் கோலி தடுத்தாடிய போது, பர்கர் உடனடியாக விராட் கோலியை பார்த்து முறைக்க, பதிலுக்கு விராட் கோலி ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினார்.

இதனை அங்கிருந்த ரசிகர்கள், வர்ணனையாளர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் அண்மை காலங்களில் விராட் கோலியை ஸ்லெட்ஜிங் செய்வதை ஜாம்பவான் அணிகளும் தவிர்த்து வந்தனர். ஏனென்றால் விராட் கோலியை ஸ்லெட்ஜிங் செய்தால் அவரின் ஆட்டமும் கவனமும் கூடுதலாகமே தவிர, வேறு எங்கும் சிதறாது.

இதனால் பர்கர் விராட் கோலியை ஸ்லெட்ஜிங் செய்ததை யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. அப்போது வர்ணனையில் ஈடுபட்டிருந்த முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, தவறான நபரிடம் பர்கர் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபடுகிறார் என்று எச்சரித்தார். இது ரசிகர்களிடையே சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

Story first published: Thursday, January 4, 2024, 10:57 [IST]
Other articles published on Jan 4, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+