கேப் டவுன் : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் டக் அவுட் ஆகி வெளியேறி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது.
இதனை அடுத்து இந்திய அணி வீரர்கள் அபாரமாக பந்து வீசி தென்ஆப்பிரிக்காவை 55 ரன்களில் ஆட்டம் இழக்க வைத்தனர். இதன் மூலம் தென்னாபிரிக்காவில் 125 கால கிரிக்கெட் வரலாற்றில் சொந்த மண்ணில் மிகக் குறைந்த ஸ்கோரில் ஆட்டம் இழந்து இருக்கிறது.

இந்த நிலையில் இந்த போட்டியை வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய இந்தியாவுக்கு ஒரு சிறப்பான வாய்ப்பாக இருக்கிறது. தென்னாபிரிக்கா 55 ரன்களில் ஆட்டம் இழந்து இருப்பதால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 200 லிருந்து 300 ரன்கள் வரை குவித்தால் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும். இதனால் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் குறைந்தது 50 ரன்கள் அடிக்க வேண்டும் என டிராவிட் கட்டளை போட்டிருந்தார்.
அந்த வகையில் ரோகித் சர்மா 39 ரன்களிலும், கில் 36 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயரை நம்பி இருந்தார். இருவரும் ஜோடி சேர்ந்து ரன் சேர்க்கலாம் என்று அவர் நினைத்திருந்தார். ஆனால் ஸ்ரேயாஸ் எதிர்கொண்ட இரண்டாவது பந்திலே விக்கெட் கீப்பர் இடம் கேட்ச் ஆகி டக் அவுட் ஆனார். இதனை ரசிகர்கள் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் இடத்திற்காக அதிக போட்டிகள் இருக்கிறது.
டி20, ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடும் ஸ்ரேயாஸ் ஐயரை எதுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் சேர்க்கிறீர்கள் என்று ஏற்கனவே பலரும் கேட்டு வருகிறார்கள். சர்பிராஸ் கான் போன்ற வீரர்கள் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கும் நிலையில் ஸ்ரேயாஸ் எதுக்கு என்று விமர்சனம் எழுந்தது.
அதற்கு ஏற்றார் போல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் அவர் 31 மற்றும் ஆறு ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்த நிலையில் இரண்டாவது டெஸ்டில் அவர் சாதிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஸ்ரேயாஸ் டக் அவுட் ஆனது அவர் மீதான நெருக்கடியை அதிகரித்து இருக்கிறது. இதனால் வெளிநாட்டு மண்களில் ஸ்ரேயாஸ் சரி வர மாட்டார் என்பதால் அவருக்கு இனி வாய்ப்பு வழங்குவது வேஸ்ட் என்று ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.