கேப் டவுன் : இந்தியா தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப்டவுன் நகரில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் டீன் ஏல்கார் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார்.
இது குறித்துப் பேசிய அவர் முதலில் நாங்கள் பேட்டிங் செய்ய முடிவு எடுத்திருக்கிறோம். ஆடுகளம் பார்ப்பதற்கு ஆர்வத்தைத் தூண்டுகிறது. நாங்கள் தற்போது இந்த தொடரில் நல்ல நிலையில் இருக்கின்றோம்.

இரண்டு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் முதல் டெஸ்ட் மட்டும் வென்றால் உங்களால் தொடரை வெல்ல முடியாது. இதனால் நாங்கள் பாதி தடைகளை தாண்டி விட்டோம். ஒரு டெஸ்ட் போட்டியிலும் நல்ல தொடக்கத்தை கொடுத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். நாங்கள் இந்திய அணிக்கு எதிராக விளையாடப் போகிறோம் என்று எங்களுக்கு நன்றாக தெரியும்.
இன்றைய ஆட்டத்தில் எங்களது அணியில் அறிமுக வீரராக டிரிஸ்டன் ஸ்டெப்ஸ் , டெம்பா பெவுமா பதில் விளையாடுகிறார். இதேபோன்று ஜெரால்ட் கோயிட்சே காயம் காரணமாக இந்த டெஸ்டில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக லுங்கி நிகிடி இருக்கிறார். இதுபோன்று கேசவ் மஹராஜ் அணிக்கு திரும்பிருக்கிறார்.
இதனை தொடர்ந்து பேசிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா நாங்களும் முதலில் பேட்டிங் செய்ய தான் இருந்தோம். ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என தெரிகிறது. இந்த ஆடுகளத்தில் முதலில் பேட்டிங் செய்வது எவ்வளவு சவாலானது என்று எங்களுக்கு தெரியும். எனினும் வேகப்பந்துவீச்சாளர்களுக்கும் இந்த ஆடுகளம் கைகொடுக்கும் என நம்புகிறேன். அதனை பயன்படுத்திக் கொண்டு எங்களது வீரர்கள் விக்கெட் எடுப்பார்கள் என நினைக்கிறேன்.
பேட்ஸ்மேன்கள் ரன்கள் சேர்த்து 20 விக்கெட்டுகளை பவுலர்கள் எடுப்பது எவ்வளவு முக்கியம் என்று எங்களுக்கு தெரியும். அது முதல் டெஸ்டில் நடைபெறவில்லை. ஆனால் இரண்டாவது டெஸ்டில் இதை சாதிக்கும் முடிவுடன் இருக்கின்றோம். எங்களுடைய அணியில் இன்று இரண்டு மாற்றங்கள் இருக்கிறது. அஸ்வினுக்கு பதில் ஜடேஜாவும் சர்துல் தாக்கூருக்கு பதில் முகேஷ் குமாரும் அணியில் இணைந்து இருக்கிறார்கள் என்று ரோஹித் சர்மா கூறியுள்ளார்.