Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி ஸ்டைலை பின்பற்றிய கோலி.. சிராஜின் அந்த விக்கெட்டுக்கு பிளான் போட்டதே கோலி தான்.. இதை பாருங்க!

கேப் டவுன் : இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 55 ரன்களில் சுருண்டது. இதற்கு முக்கிய காரணம் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் 9 ஓவர்களை வீசி 15 ரன்கள் விட்டுக் கொடுத்து ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன் மூலம் தென்னாப்பிரிக்க வீரர்கள் வந்த வேகத்திலேயே பெவிலியன் திருப்பினார்கள். இந்த நிலையில் முஹம்மது சிராஜின் ஒரு விக்கெட்டுக்கு விராட் கோலி ஒரு பிளான் போட்டு கொடுத்தது தெரிய வந்துள்ளது. இது அப்படியே தோனியின் ஸ்டைல் என்று ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

Ind vs sa 2nd test - Watch the video How Virat kohli master plan get wicket for siraj

தோனி கேப்டன் பதவியில் இருந்து சென்ற பிறகு விக்கெட் கீப்பராக அணியில் நீடித்தார் அப்போது இளம் வீரர்களுக்கு பந்தை எப்படி வீச வேண்டும் என்பது குறித்து எல்லாம் தோனி தான் அறிவுரை வழங்குவார். அதேபோல் இந்த டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சாதாரண வீரராக இருந்தும் ஸ்லிப்பில் நின்று கொண்டு முகமது சிராஜுக்கு பந்தை எப்படி வீசவேண்டும் என்பது குறித்து பிளான் போட்டு கொடுத்தார்.

Ind vs sa 2nd test - Watch the video How Virat kohli master plan get wicket for siraj

குறிப்பாக தென்னாப்பிரிக்காவின் அதிபயங்கர வீரரான மார்கோ ஜான்சன் விக்கெட்டை இந்தியா மிக விரைவாக வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. ஏனென்றால் முதல் டெஸ்டில் அவர் அதிரடியாக விளையாடி வெற்றியை இந்தியாவிடம் இருந்து பறித்து சென்று விட்டார்.அதேபோல் ஒரு நிலை இன்றைய ஆட்டத்தில் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை உணர்ந்த விராட் கோலி பந்தை நன்றாக வெளியே வீசு அதை அவர் அடித்து கேட்ச் ஆகி விடுவார் என்று முகமது சிராஜுக்கு கூறினார்.

இதை அப்படியே முஹம்மது சிராஜ் செய்து காட்ட மார்கோ ஜான்சன் வெளியேறினார். இதன் மூலம் இந்த விக்கெட்டை இந்திய அணி வீரர்கள் கொண்டாடினர். இந்த நிலையில் ரசிகர்கள் இந்த வீடியோவை டிரெண்ட் செய்து லீடர் விராட் கோலி என்று ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

Story first published: Wednesday, January 3, 2024, 18:27 [IST]
Other articles published on Jan 3, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+