Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முத்தம் கொடுக்காம போக மாட்டேன்.. அடம் பிடித்த ரசிகர்.. பதறி தலைகுப்புற விழுந்த ரோஹித் சர்மா!

புனே : மைதானத்துக்குள் நுழைந்து அடாவடி செய்யும் கிரிக்கெட் ரசிகர்களில் புது ரகமாக ஒருவர் இன்று சிக்கினார்.

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இடையே சிக்ஸர் மன்னன் ரோஹித் சர்மாவின் தீவிர ரசிகர் ஒருவர் அத்துமீறி உள்ளே நுழைந்தார்.

அதகளம் ஆனது

அதகளம் ஆனது

ஓடி வந்த அந்த ரசிகர் காலில் மட்டும் விழுந்தால் பரவாயில்லை. முத்தம் கொடுக்க முயல, அதைக் கண்டு ரோஹித் சர்மா பதற, மைதானம் ஒரே அதகளம் ஆனது.

தோனி, கோலி ரசிகர்கள்

தோனி, கோலி ரசிகர்கள்

இந்திய கிரிக்கெட்டில் தோனி மற்றும் கோலிக்கு தான் அதிக கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளனர். சில வெறிப் பிடித்த ரசிகர்கள் போட்டி நடைபெறும் போதே மைதானத்துக்குள் அத்துமீறி நுழைவது உண்டு.

அத்துமீறல் சம்பவங்கள்

அத்துமீறல் சம்பவங்கள்

அந்த ரசிகர்கள் காலில் விழுவது, செல்பி எடுக்க முயல்வது என நட்ட நடு மைதானத்தில் நேரலை செய்யப்படும் போட்டிக்கு இடையே இடையூறு செய்வது அதிர்ச்சியான சம்பவமாக இருக்கும். அது இன்று வரை தொடர் கதையாக உள்ளது.

ரோஹித் ரசிகர்கள்

ரோஹித் ரசிகர்கள்

தோனி, கோலிக்கு அடுத்து ரோஹித் சர்மாவுக்கு ரசிகர்கள் அதிகரித்த வண்ணம் உள்ளனர். இணையத்தில் கூட அவர்கள் தான் சமீபத்தில் அதிக கிரிக்கெட் பதிவுகளை பகிர்ந்து வருகிறார்கள்.

45வது ஓவரில்..

45வது ஓவரில்..

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 45வது ஓவரின் போது தான் அந்த ரசிகர் அத்துமீறி உள்ளே நுழைந்தார். அந்த ஓவரை ஜடேஜா வீசி வந்தார். முத்துசாமி அந்த ஓவரின் இரண்டாம் பந்தில் ஆட்டமிழந்தார்.

அத்துமீறல்

அத்துமீறல்

அடுத்த பேட்ஸ்மேனாக பிலாண்டர் களத்துக்கு வந்தார். மூன்றாம் பந்தை வீசி முடித்தார் ஜடேஜா. அப்போது தான் அந்த ரோஹித் சர்மா ரசிகர் மைதானத்துக்குள் அத்து மீறி நுழைந்தார்.

அடம் பிடித்த ரசிகர்

அடம் பிடித்த ரசிகர்

ஸ்லிப்பில் பீல்டிங் நின்று இருந்தார் ரோஹித் சர்மா. அவர் அருகே சென்றவர் அவர் காலில் விழுந்தார். அவரை தவிர்க்க போராடினார் ரோஹித் சர்மா. அந்த ரசிகர் காலில் விழுவது போல இல்லை. காலை பிடிக்க முயற்சி செய்து கொண்டு இருந்தார்.

போராட்டம்

போராட்டம்

அதைக் கண்ட ரோஹித் சர்மா பதறிப் போய் அவரை விலக்க முயற்சி செய்தார். அந்த ரசிகர் தரையோடு படுத்துக் கொண்டு இருந்தார். ரோஹித் அவரை விலக்கவும், காலை பிடித்து முத்தமிட அந்த ரசிகரும் போராடிக் கொண்டு இருந்தனர்.

தலை குப்புற விழுந்த ரோஹித்

தலை குப்புற விழுந்த ரோஹித்

அப்போது மைதான காவலர்கள் அந்த ரசிகரை பிடிக்க ஓடி வரவே அந்த ரசிகர் எழுந்தார். அந்த நேரம் தடுமாறிய ரோஹித் சர்மா தலை குப்புற பல்டி அடித்து கீழே விழுந்தார்.

இழுத்து செல்லப்பட்டார்

இழுத்து செல்லப்பட்டார்

பின்னர் காவலர்கள் அந்த ரசிகரை இழுத்துச் சென்றனர். அதன் பின் தான் ரோஹித் சர்மா எழுந்து நின்றார். அப்போதும் அந்த ரசிகர் மல்லுக் கட்டிக் கொண்டு ரோஹித் சர்மாவிடம் செல்ல முயன்றார். ஒரு வழியாக அவர் சென்ற பின் போட்டி தொடர்ந்தது.

Story first published: Sunday, October 13, 2019, 10:45 [IST]
Other articles published on Oct 13, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+