Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA: முதல் டி20 போட்டியில் இந்த 5 பவுலர்களை இந்திய அணி பயன்படுத்தனும்.. அஸ்வின் கருத்து

மும்பை: இந்தியா, தென்னாபிரிக்க அணிக்கு இடையிலான முதல் டி20 போட்டி நாளை செவ்வாய்க்கிழமை கட்டாக் நகரில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி தற்போது தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த தொடர் குறித்து கருத்து தெரிவித்துள்ள அஸ்வின், இந்திய அணியை பொறுத்தவரை சஞ்சு சாம்சனை மூன்றாவது வீரராக களம் இறக்க முடியுமா என்பதைப் பார்க்க வேண்டும்.

இல்லையென்றால் சூரியகுமார் மற்றும் திலக் வர்மாவை வைத்து களமிறங்க வேண்டும். மூன்றாம் இடத்தில் சஞ்சு சாம்சனை களம் இறக்கிப் பார்த்தார்கள். ஆனால் கில் அணிக்குள் வந்ததை அடுத்து அணியின் வடிவமே முற்றிலும் மாறிவிட்டது. சஞ்சு சாம்சன் முதலில் தொடக்க வீரராகவும், விக்கெட் கீப்பராகவும் இருந்தார்.

Ind vs sa

தற்போது தொடக்க வீரர் வேறொருவர் வந்துவிட்டார். இதன் காரணமாக நடுவரிசையில் நீங்கள் ஒரு விக்கெட் கீப்பிரையும், பினிஷரையும் சேர்க்க வேண்டும். இந்த தொடரில் இந்திய அணியின் பேட்டர்களுக்கு என்ன ரோல் என்பதை தெளிவாக சொல்லிவிட வேண்டும் என்று நான் எதிர்பார்க்கின்றேன்.

இந்த டி20 தொடரை பார்க்க நான் ஆவலாக இருக்கின்றேன். ஏனென்றால் தென்னாப்பிரிக்கா அணி தான் பேட்டிங்கில் நமது பவருக்கு ஏற்ற வகையில் விளையாடும். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலக கோப்பை வெல்ல கூடிய அணியாக தென்னாப்பிரிக்கா இருக்கிறதா என்பதை நாம் பார்க்க வேண்டும். அவர்களுடைய பவுலிங்கை பாருங்கள்.

ஆபத்தை விளைவிக்க கூடிய வீரர்கள் யாரும் இல்லை. குல்தீப், வருண் மற்றும் பும்ரா ஆகியோருக்கு நிகரான பவுலர்கள் அங்கு இருக்கிறார்களா என்று தெரியவில்லை.ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை இந்த தொடர் மிகவும் முக்கியமானது. உலகக்கோப்பைக்கு முன்பாக இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும்.

நாம் அதிக அளவு பரிசோதனை முயற்சியை செய்து விட்டோம். தற்போது டி20 அணியில் நிலைத்தன்மை என்பது மிகவும் முக்கியம். இதேபோன்று ஆர்ஸ்தீப் சிங் டி20 அணியில் இருக்கிறாரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். அவரை நீக்குவதற்கான காரணம் கொஞ்சம் கூட கிடையாது. கண்டிப்பாக அவரை அணியில் சேர்க்க வேண்டும்.

வருண் மற்றும் குல்தீப் என இரண்டு பவுலரையும் பயன்படுத்த முடியுமா என்பதையும் பார்க்க வேண்டும். அது மிகவும் முக்கியம் என்று நான் கருதுகின்றேன். பனிப்பொழிவு இருந்தால் மட்டுமே மூன்றாவது வேகப்பந்துவீச்சாளரை பார்க்க வேண்டும். இல்லை என்றால் பும்ரா ஆர்ஸ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி குல்தீப்யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய பவுலர்களை வைத்து விளையாட வேண்டும்.

இந்த பவுலிங் படை எதிரணியை குறைந்த இலக்கில் சுருட்ட கூடிய திறமை இருக்கின்றது. இதேபோல் நாம் எந்த ஸ்கோரை வேண்டுமானாலும் இந்த பவுலர்களை நம்பி தற்காத்துக் கொள்ளலாம். இந்த பௌலிங் அட்டாக்கை முதல் போட்டியிலே பார்க்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்.

டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பு வருண் சக்கரவர்த்தியின் ரகசிய திறமையை வெளிக்காட்டி விடாதீர்கள். அவருடைய ரகசியம் என்னவென்று வெளியே தெரியக்கூடாது. இருவருக்கும் பெரிய அளவு நம் பந்துவீசு வைப்பதன் மூலம் தென்னாப்பிரிக்கா அவர்களுடைய ரகசிய திறனை கண்டுபிடிக்க முடியும் என்று அஸ்வின் கூறியுள்ளார்.

Story first published: Monday, December 8, 2025, 20:39 [IST]
Other articles published on Dec 8, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+