தோனி, கங்குலியால் கூட முடியலை.. நடத்தி காட்டுவாரா ரோகித் சர்மா? கேப்டன்சியை நிரூபிக்க கடைசி வாய்ப்பு
சென்சுரியன்: தென்னாப்பிரிக்கா மண்ணில் அசாரூதீன், சச்சின் டெண்டுல்கர், கங்குலி, ராகுல் டிராவிட், தோனி, விராட் கோலி உள்ளிட்ட இந்திய கேப்டன்களால் செய்ய முடியாத சாதனையை ரோகித் சர்மா செய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அண்மையில் மும்பை அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா கேப்டனாக அறிவிக்கப்பட்டார். எதிர்காலத்தை கணக்கில் கொண்டு மும்பை அணி முடிவை எடுத்திருந்தாலும், ரோகித் சர்மாவின் டி20 கிரிக்கெட் வாழ்க்கையையே மும்பை அணியின் முடிவு கேள்விக்குறியாக்கியுள்ளது.

ஏற்கனவே இந்திய டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும், ஒருநாள் அணியின் கேப்டனாக கேஎல் ராகுலும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதன்பின் டெஸ்ட் அணியின் கேப்டன்சி மட்டுமே ரோகித் சர்மாவின் கைகளில் உள்ளது. இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் நாளை சென்சுரியன் மைதானத்தில் தொடங்கவுள்ளது.
இதுவரை 8 முறை இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. 1992ல் முகமது அசாரூதீன் தலைமையிலும், 1996ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் தலைமையிலும், 2001ல் கங்குலி தலைமையிலும், 2006 -07ல் ராகுல் டிராவிட் தலைமையிலும், 2010-11 மற்றும் 2013-14 ஆகிய ஆண்டுகளில் தோனி தலைமையிலும், 2018-19 மற்றும் 2021-22ல் விராட் கோலி தலைமையிலும் இந்திய அணி பயணித்தது.
அதில் ஒரு முறை கூட இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியதில்லை. இதுவரை நடைபெற்ற 23 டெஸ்ட் போட்டிகளில் 4ல் மட்டுமே இந்தியா வென்றுள்ளது. இதனால் ரோகித் சர்மா தலைமையில் சென்றுள்ள இந்திய அணி புதிய வரலாற்றை படைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ரோகித் சர்மா 36 வயதை எட்டியுள்ளார்.
இதனால் ரோகித் சர்மா தனது கடைசி கட்ட கிரிக்கெட் வாழ்வை எட்டியுள்ளதாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே உலகக்கோப்பை இறுதியில் தோல்வியடைந்த நிலையில், தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரை வென்று தனது கேப்டன்சியை நிரூபிப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதன் மூலம் தோனி, கபில் தேவ், கங்குலி, கோலி வரிசையில் சிறந்த கேப்டன் பட்டியலில் இணைவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Story first published: Monday, December 25, 2023, 23:02 [IST]
Other articles published on Dec 25, 2023


Click it and Unblock the Notifications