Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நிதான சதம் அடித்து.. கங்குலி ரெக்கார்டை காலி செய்த ரோஹித் சர்மா! #INDvsSA

சௌதாம்ப்டன் : இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே ஆன உலகக்கோப்பை லீக் போட்டியில் ரோஹித் சர்மா சதம் அடித்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

ரோஹித் சர்மா இந்தப் போட்டியில் தன் பொறுமையான சதத்தை அடித்திருந்தார். 100 ரன்களை எட்ட 128 பந்துகளை எடுத்துக் கொண்டார்.

இந்த நிதான சதம் மூலம் சௌரவ் கங்குலியின் சாதனையை முறியடித்துள்ளார் ரோஹித் சர்மா. மேலும், உலகக்கோப்பை தொடரில் சில முக்கிய சாதனைகளையும் செய்துள்ளார் ரோஹித் சர்மா.

போட்டியில் சதம்

போட்டியில் சதம்

இந்தப் போட்டியில் முதலில் ஆடிய தென்னாப்பிரிக்கா 227 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்திய அணியில், கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்ற ரோஹித் சர்மா 144 பந்துகளில் 122 ரன்கள் எடுத்தார். இந்தியா 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

23வது சதம்

23வது சதம்

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக ரோஹித் சர்மா அடித்த சதம், அவரது 23வது ஒருநாள் போட்டி சதம் ஆகும். இதன் மூலம் இந்திய அளவில் அதிக ஒருநாள் போட்டிகள் சதம் அடித்தவர்கள் வரிசையில் ரோஹித் சர்மா மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.

கங்குலி சாதனை

கங்குலி சாதனை

முன்னதாக சௌரவ் கங்குலி 22 சதங்கள் அடித்து மூன்றாம் இடத்தில் இருந்தார். அவரை பின் தள்ளி, ரோஹித் சர்மா அந்த இடத்தை பிடித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்தவர்கள் வரிசையில் சச்சின் 49 சதங்களுடன் முதல் இடத்திலும், விராட் கோலி 41 சதங்களுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.

இரட்டை சத சாதனை

இரட்டை சத சாதனை

உலகளவில் அதிக சதம் அடித்த வீரர்கள் வரிசையில் ரோஹித் சர்மா தற்போது ஒன்பதாவது இடத்தில் இருக்கிறார். அதே சமயம், ரோஹித் அடித்த 23 சதங்களில், மூன்று இரட்டை சதங்களும் அடங்கும். அவரது இரட்டை சத எண்ணிக்கையை இதுவரை யாரும் முறியடிக்கவில்லை.

அதிக ரன்கள்

அதிக ரன்கள்

உலகக்கோப்பை தொடரில் சேஸிங் செய்த போட்டியில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் வரிசையில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார் ரோஹித். 1996இல் கென்யாவுக்கு எதிரான சேஸிங்கில் சச்சின் 127 ரன்கள் அடித்ததே முன்பு அதிகபட்சமாக இருந்தது. தற்போது ரோஹித் சர்மா 122 ரன்கள் அடித்து இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.

புதிய மைல்கல்

புதிய மைல்கல்

மேலும், இந்தப் போட்டியில் எடுத்த 122 ரன்கள் மூலம், ரோஹித் 12,000 சர்வதேச ரன்களை கடந்தார். இதன் மூலம், இந்திய அளவில் இந்த மைல்கல்லை எட்டிய ஒன்பதாவது வீரர் என்ற பெருமையை பெற்றார்.

எட்டு வீரர்கள்

எட்டு வீரர்கள்

முன்னதாக, சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சுனில் கவாஸ்கர், சௌரவ் கங்குலி, தோனி, விராட் கோலி, வீரேந்தர் சேவாக், முகமது அசாருதீன் ஆகியோர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.

Story first published: Thursday, June 6, 2019, 12:08 [IST]
Other articles published on Jun 6, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+