Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரொம்ப நன்றி! தரமான சம்பவம் செய்து விட்டு.. கோலி, ரவி சாஸ்திரியை குத்திக் காட்டிய சிக்ஸர் மன்னன்!

Recommended Video

Rohit sharma reveals secret | சொல்ல முடியாத ரகசியத்தை நாசூக்காக போட்டு உடைத்த ரோஹித்-வீடியோ

விசாகப்பட்டினம் : தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி முடிந்த உடன் ரோஹித் சர்மா பேசுகையில் கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு நன்றி கூறினார்.

ரோஹித் சர்மாவுக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்காமல் இருந்த அவர்களுக்கு, தற்போது வாய்ப்பு அளித்ததற்காக நன்றி கூறினார் ரோஹித் சர்மா.

அவர் கூறிய நன்றி, அவர்களை குத்திக் காட்டுவதை போலவே இருந்தது என பேச்சு கிளம்பி உள்ளது. என்ன நடந்தது?

ரோஹித் சர்மா டெஸ்ட் வாய்ப்பு

ரோஹித் சர்மா டெஸ்ட் வாய்ப்பு

ரோஹித் சர்மாவுக்கு டெஸ்ட் அணி வாய்ப்பு என்பது 2016 முதல் சிக்கலாக மாறியது. அதற்கு முன்பும் அவர் தொடர்ந்து அணியில் இடம் பெறவில்லை. எனினும், 2016இல் நீண்ட காலம் அவருக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது.

சதமடித்தார்

சதமடித்தார்

பின்னர் 2017இன் பின் பகுதியில் நடந்த இலங்கை தொடரில் சதம், அரைசதம் அடித்து தன்னை நிரூபித்தார், இனி அவருக்கு தொடர்ந்து டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அதே போல, தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் இடம் பெற்றார்.

ஒரு தொடரில் சறுக்கல்

ஒரு தொடரில் சறுக்கல்

2018 ஜனவரியில் நடைபெற்ற அந்த தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்தது. அந்த தொடரில் ரோஹித் சர்மா ஸ்விங் ஆகும் பந்துகளில் தொடர்ந்து ஆட்டமிழந்து வந்தார். அதை பெரிய குற்றச்சாட்டாக மாற்றியது இந்திய அணி நிர்வாகம்.

வாய்ப்பு மறுப்பு

வாய்ப்பு மறுப்பு

அதன் பின் 2018இல் நடந்த ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர்களில் காரணமே இன்றி ரோஹித் சர்மாவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதன் பின், பல முன்னாள் வீரர்களும் ரோஹித் சர்மாவை டெஸ்ட் அணியில் தேர்வு செய்ய வேண்டும் என கொடுத்த அழுத்தத்தின் காரணமாக அவரை ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ஆட வைத்தனர்.

மீண்டும் அதே கதை

மீண்டும் அதே கதை

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ஓரளவு ரன் குவித்தார் ரோஹித் சர்மா. அந்த தொடரின் கடைசி போட்டிக்கு முன்னதாக அவருக்கு குழந்தை பிறந்தது. அதனால், பாதி தொடரில் அவர் இந்தியா கிளம்பினார். அதன் பின் மீண்டும், அவருக்கு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் களமிறங்க வாய்ப்பு அளிக்கவில்லை.

விமர்சனம்

விமர்சனம்

ரோஹித் சர்மா டெஸ்ட் அணியில் தொடர்ந்து அலைக்கழிக்கப்படுவதை ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் என அனைவரும் விமர்சித்தனர். உலகக்கோப்பை தொடரில் ஐந்து சதங்கள் அடித்து உச்சகட்ட பார்மில் இருக்கும் வீரரை களமிறக்காமல் இருப்பது தவறு என புகார் கூறினர்.

மாற்று வீரர் வாய்ப்பு

மாற்று வீரர் வாய்ப்பு

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் துவக்க வீரராக ஆடிய ராகுல் சரியாக ரன் குவிக்காத நிலையில், அணியில் இருந்து நீக்கப்பட்டார். வேறு மாற்று துவக்க வீரர்கள் இல்லாத நிலையில், டெஸ்ட் அணியில் மிடில் ஆர்டர் வீரரான ரோஹித் சர்மாவை தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் துவக்க வீரராக ஆட வைத்தனர்.

சாதனை ஆட்டம்

சாதனை ஆட்டம்

துவக்க வீரராக தன் முதல் போட்டியிலேயே முத்திரை பதித்தார் ரோஹித். இரண்டு இன்னிங்க்ஸ்களிலும் சதம் அடித்த அவர், 13 சிக்ஸர் அடித்து 23 வருட வாசிம் அக்ரம் சாதனையை முறியடித்தார்.

நன்றி சொன்னார்

நன்றி சொன்னார்

தன் சாதனை ஆட்டத்துக்குப் பின் பேசிய ரோஹித் சர்மா, இதற்கு முன் தான் துவக்க வீரராக டெஸ்டில் ஆடாத நிலையில், தனக்கு துவக்க வீரராக வாய்ப்பு அளித்த கேப்டன் மற்றும் பயிற்சியாளருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன் என்றார்.

இந்த நன்றிக்கு என்ன அர்த்தம்?

இந்த நன்றிக்கு என்ன அர்த்தம்?

டெஸ்ட் அணியில் ரோஹித் சர்மாவுக்கு சரியான வாய்ப்பு கொடுக்காத கேப்டன், பயிற்சியாளருக்கு துவக்க வீரராக வாய்ப்பு அளித்ததற்கு ரோஹித் சர்மா கூறிய நன்றிக்கு என்ன அர்த்தம்? அவர்களை குத்திக் காட்டித்தான் ரோஹித் சர்மா பேசினார் என ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.

Story first published: Monday, October 7, 2019, 17:27 [IST]
Other articles published on Oct 7, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+