Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA: விராட் கோலி காலில் விழுந்த ரசிகர்.. பெவிலியனில் இருந்து கெட்ட வார்த்தையில் திட்டிய ரோகித்

ராஞ்சி: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் நட்சத்திர வீரர் விராட் கோலி தன்னுடைய 52 வது ஒரு நாள் சதத்தை பூர்த்தி செய்து இருக்கிறார். விராட் கோலி பார்ம் தொடர்பாக பல்வேறு விமர்சனம் எழுந்த நிலையில், அதனை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 74 ரன்கள் அடித்து பதிலடி அளித்தார்.

ஒரு நாள் போட்டியில் எப்படி விளையாடினாரோ அதே ஆட்டத்தை இன்று ராஞ்சியிலும் வெளிகாட்டினார். விராட் கோலி இந்த மைதானத்தில் அவர் ஏற்கனவே இரண்டு சதம் அடித்து இருந்த நிலையில், இது மூன்றாவது சதமாகும்.

Fan touches Virat Kohli feet

இதேபோன்று இந்த இன்னிங்ஸில் அவர் ஏழு சிக்ஸர்களை பறக்க விட்டார். தனிப்பட்ட முறையில் ஒரே இன்னிங்சில் அதிக சிக்ஸர்களை அடித்தது விராட் கோலிக்கு இது இரண்டாவது முறையாகும். எப்படி விராட் கோலி சதம் அடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

முதலில் கடவுளுக்கு நன்றி தெரிவித்து பின்னர் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருந்த டாலரை எடுத்து முத்தம் கொடுத்தார். அப்போது திடீரென்று ரசிகர் ஒருவர் மைதானத்திற்கு உள்ளே புகுந்து விராட் கோலியின் காலில் வந்து விழுந்தார். இதனை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத விராட் கோலி அந்த ரசிகரை தயவுசெய்து எழுந்திருக்குமாறு கூறினார்.

உடனடியாக பாதுகாவலர் அங்கே வந்து அந்த ரசிகரை அப்புறப்படுத்தி அழைத்துச் சென்றார். இந்த காட்சியை பெவிலியனில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த ரோகித் சர்மா முதலில் கைத்தட்டி கொண்டாடிய போது திடீரென்று அந்த ரசிகர்கள் காலில் விழுந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டு இருப்பதால் இது எந்த தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறதோ என பயந்த ரோகித் சர்மா ரசிகரின் இந்த செயலை கெட்ட வார்த்தையை பயன்படுத்தி திட்டினார். ரசிகர் அப்புறப்படுத்தப்பட்டதை அடுத்து ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்த பலரும் இந்த சதத்தை கொண்டாடினர். குறிப்பாக இந்திய அணியின் பயிற்சியாளரான கம்பீரும், விராட் கோலியின் இந்த சதத்திற்கு கைதட்டினார். விராட் கோலி ஆட்டம் இழந்தவுடன் பெவிலியனுக்கு வந்த பிறகு கட்டி அணைத்து பாராட்டினார்.

Story first published: Sunday, November 30, 2025, 18:53 [IST]
Other articles published on Nov 30, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+