For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs SA - இறுதி போட்டியில் இந்தியா டாஸ் வென்றால் ரோகித் என்ன செய்ய வேண்டும்.. எது நல்லது?

பார்படாஸ் : டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் இதுவரை நடப்பு தொடரில் தோல்வியே தழுவாத இந்தியாவும், தென்னாப்பிரிக்கா அணியும் பலப் பரிட்சை நடத்துகிறது. இந்த போட்டி பார்படாஸ் பகுதியில் நடைபெறுகிறது. இந்த மைதானம் எவ்வாறு செயல்பட போகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்றால் இந்தியா என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.இந்த மைதானத்தில் ஏற்கனவே நடப்பு தொடரில் இந்தியா சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டு விளையாடியது.

t20 world cup ind vs sa Rohit sharma

இதில் டாஸ் வென்று இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து எட்டு விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது. இதை அடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 134 ரன்களில் சுருண்டது. இறுதிப் போட்டிக்கு அமைக்கப்படும் ஆடுகளமும் இந்தியாவுக்கு சாதகமாக தான் இருக்கும். இதனால் இந்திய அணி டாஸ் வென்றால் முதலில் கண்டிப்பாக பேட்டிங் தான் செய்ய வேண்டும்.

இந்தியா இந்த தொடரில் பெரும்பாலான போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்து பெரிய இலக்கை எட்டி வெற்றி பெற்றிருக்கிறது. மேலும் இரண்டாவதாக பந்து வீசும் போது இந்திய அணி சுழற் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தி எதிரணி விக்கெட்டுகளை எடுத்து விடுகிறது. இதேபோன்று மேற்கிந்திய தீவுகள் ஆடுகளங்கள் ஆரம்பத்தில் பேட்டிங்கிற்கு சாதகமாகவும் ஓவர்கள் செல்ல செல்ல ஆடுகளம் தோய்வாகவும் மாறி வருகிறது.

இதனால் சேஸிங் செய்வது மிகவும் கடினமாக மாறிவிடுகிறது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்வதை சிறப்பாக இருக்கும். ஒருவேளை தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தால் இந்திய அணி தங்களுடைய சுழற் பந்துவீச்சாளர்கள் மற்றும் பும்ரா ஆர்ஸ்தீப் சிங் ஆகியோரை பயன்படுத்தி தென்னாப்பிரிக்காவை 120 முதல் 140 ரன்களில் சுருட்ட வேண்டும்.

இவ்வாறு செய்தால் மட்டுமே வெற்றி வாய்ப்பு நிச்சயம். தென்னாப்பிரிக்கா அணி முக்கியமான போட்டிகளில் பதற்றம் அடைந்து தோல்வியை தழுவுவார்கள். இதனால் ரசிகர்கள் அந்த அணியை சோக்கர்ஸ் என்று அழைப்பார்கள். இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து பெரிய இலக்கை நிர்ணயித்தால் அதனை சேஸ் செய்ய தென்னாபிரிக்க அணி தடுமாறும்.

Story first published: Friday, June 28, 2024, 22:33 [IST]
Other articles published on Jun 28, 2024
English summary
Ind vs SA Finals - What should India need to do if Rohit sharma won the toss in Barbados - இந்தியா தென்னாப்பிரிக்கா இறுதி போட்டி: இந்தியா டாஸ் வென்றால் ரோகித் என்ன செய்ய வேண்டும்.. எது நல்லது?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+