Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெஸ்ட் வரலாற்றை புரட்டிப் போட்ட போட்டி.. 2 அணியும் சேர்ந்து செய்த இமாலய சாதனை.. ஹிட்மேனுக்கு நன்றி!

Recommended Video

INDIA-SOUTH AFRICA 1ST TEST | டெஸ்ட் வரலாற்றை புரட்டிப் போட்ட போட்டி.. 2 அணியும் சாதனை-வீடியோ

விசாகப்பட்டினம் : இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே ஆன முதல் டெஸ்ட் போட்டி கிரிக்கெட் வரலாற்றில் தனி இடத்தை பிடித்துள்ளது.

ஆம், இரண்டு அணிகளும் சேர்ந்து அடித்த சிக்ஸர்கள் எண்ணிக்கை புதிய சாதனை படைத்துள்ளது.

அதற்கு பிள்ளையார் சுழி போட்டு அதிக சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்த ரோஹித் சர்மா தான் முக்கிய காரணம்.

இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே ஆன முதல் டெஸ்டில் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஐந்தாம் நாள் வரை நீடித்த இந்தப் போட்டியில் இரு அணிகளும் சேர்ந்து சிக்ஸர் அடிப்பதில் வரலாறு படைத்தன.

எத்தனை சிக்ஸர்கள்?

எத்தனை சிக்ஸர்கள்?

இந்தப் போட்டியில் மொத்தம் 37 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன. இந்தியா மொத்தமாக 27 சிக்ஸர்களும், தென்னாப்பிரிக்கா அணி 10 சிக்ஸர்களும் அடித்தன. இதில் ரோஹித் சர்மா மட்டுமே 13 சிக்ஸர்கள் அடித்து சாதனை புரிந்தார்.

உலக சாதனை

உலக சாதனை

டெஸ்ட் போட்டிகள் வரலாற்றில் இதுவரை ஒரே போட்டியில் 35 சிக்ஸர்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. அதை முறியடித்துள்ள இந்தப் போட்டியில் 37 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன. 2014-15 பாகிஸ்தான் - நியூசிலாந்து இடையே நடந்த டெஸ்ட் போட்டியில் செய்யப்பட்ட சிக்ஸர் சாதனையை இந்தப் போட்டி முறியடித்துள்ளது.

ரோஹித் சர்மா துவங்கி வைத்தார்

ரோஹித் சர்மா துவங்கி வைத்தார்

இந்தப் போட்டியில் சிக்ஸர் வேட்டையை முதலில் துவக்கி வைத்தவர் சிக்ஸர் மன்னன் ரோஹித் சர்மா தான். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிக்ஸர் மன்னனான அவர், இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்க்ஸில் ஆறு சிக்ஸ் அடித்தார்.

விஷயம் இது தான்

விஷயம் இது தான்

அவர் எளிதாக சிக்ஸ் அடிக்க முக்கிய காரணம், போட்டி நடந்த விசாகப்பட்டினம் மைதானத்தின் பவுண்டரி எல்லை அருகே இருந்தது தான். அப்படி இருந்தாலும் டெஸ்ட் போட்டிகளில் யாரும் சிக்ஸ் அடிக்க ஆசைப்பட மாட்டார்கள். காரணம், கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட் ஆனால் அது அணிக்கு பெரும் இழப்பாக இருக்கும்.

பின்தொடர்ந்த மாயங்க் அகர்வால்

பின்தொடர்ந்த மாயங்க் அகர்வால்

ஆனால், ரோஹித் சர்மா அசாதாரணமாக சிக்ஸ் அடித்து, இந்த மைதானத்தில் எளிதாக சிக்ஸ் அடிக்கலாம் என்பதை காட்டினார். அவருடன் முதல் இன்னிங்க்ஸில் பேட்டிங் செய்த துவக்க வீரர் மாயங்க் அகர்வால் தன் பங்கிற்கு ஆறு சிக்ஸ் அடித்தார். ஜடேஜா ஒரு சிக்ஸ் அடிக்க, இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் 13 சிக்ஸர் அடித்தது.

இரண்டாம் இன்னிங்க்ஸ் அதிரடி

இரண்டாம் இன்னிங்க்ஸ் அதிரடி

இரண்டாம் இன்னிங்க்ஸில் விரைவாக ரன் குவித்து தென்னாப்பிரிக்க அணிக்கு பெரிய இலக்கை நிர்ணயிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆடியது இந்திய அணி. இந்த முறை ரோஹித் சர்மா 7, புஜாரா 2, ஜடேஜா 3, கோலி 1, ரஹானே 1 சிக்ஸ் அடித்து பட்டையைக் கிளப்பினர்.

தென்னாப்பிரிக்கா பத்து சிக்ஸ்

தென்னாப்பிரிக்கா பத்து சிக்ஸ்

தென்னாப்பிரிக்க அணியும் சிக்ஸ் அடித்தது என்றாலும் இந்தியா அளவுக்கு அந்த அணி அடிக்கவில்லை. முதல் இன்னிங்க்ஸில் 7 சிக்ஸர்களும், இரண்டாம் இன்னிங்க்ஸில் 3 சிக்ஸர்களும் மட்டுமே அடித்தது.

ரோஹித் செய்த சாதனை

ரோஹித் செய்த சாதனை

இந்தப் போட்டியில் அதிக சிக்ஸர் என்ற சாதனை ஒருபுறம் இருக்க, தனிப்பட்ட முறையில் ஒரே டெஸ்ட் போட்டியில் அதிக சிக்ஸர் அடித்த வீரர் என்ற சாதனையை செய்துள்ளார் ரோஹித் சர்மா.

வாசிம் அக்ரம் சாதனை

வாசிம் அக்ரம் சாதனை

வாசிம் அக்ரம் முன்பு ஒரே டெஸ்டில் 12 சிக்ஸர் அடித்ததே சாதனையாக இருந்தது. அந்த 25 வருட சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா, 13 சிக்ஸர்கள் அடித்து முதல் இடத்தை பிடித்தார்.

Story first published: Sunday, October 6, 2019, 17:20 [IST]
Other articles published on Oct 6, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+