For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs SA: கோலி எடுத்த டாஸ் முடிவு.. ரோஹித் சர்மாவின் அதிரடி மாற்றம்.. அஸ்வின், பண்ட் நிலை என்ன?

விசாகப்பட்டினம் : இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே ஆன முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். ரோஹித் சர்மா, மாயங்க் அகர்வால் துவக்கம் அளித்து பேட்டிங் செய்து வருகின்றனர்.

இந்தப் போட்டியின் டாஸ் முடிவு தென்னாப்பிரிக்க அணிக்கு பாதகமாக அமைந்தது.

டாஸ் வென்றார்

டாஸ் வென்றார்

இந்திய அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். தென்னாப்பிரிக்க அணி கேப்டன் பாப் டு ப்ளேசிஸ் டாஸ் வெல்லாதது குறித்து தன் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

பிட்ச் எப்படி?

பிட்ச் எப்படி?

அதற்கு முக்கிய காரணம், விசாகப்பட்டினம் ஆடுகளம் தான். இந்த மைதானத்தில் முதல் நாள் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் ஆடுகளம், அடுத்தடுத்த நாட்களில் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

அஸ்வின், ஜடேஜா உள்ளே

அஸ்வின், ஜடேஜா உள்ளே

இந்திய அணியில் அனுபவ சுழற் பந்துவீச்சாளர்கள் அஸ்வின், ஜடேஜா அணியில் இடம் பெற்றுள்ளனர். அஸ்வின் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இடம் பெறாத நிலையில், இந்த தொடரில் இடம் பெற்றுள்ளார்.

பண்ட் வெளியே, சாஹா உள்ளே

பண்ட் வெளியே, சாஹா உள்ளே

விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் பார்ம் அவுட் என்பதால் அணியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு பதில் விரிதிமான் சாஹா அணியின் விக்கெட் கீப்பராக இடம் பெற்றுள்ளார்.

வேகப் பந்துவீச்சு யார்?

வேகப் பந்துவீச்சு யார்?

பும்ரா காயம் காரணமாக டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்தப் போட்டியில் இந்திய அணி இஷாந்த் சர்மா, முகமது ஷமி என இரண்டு வேகப் பந்துவீச்சாளர்களை மட்டுமே களமிறக்கி உள்ளது.

ரோஹித் துவக்க வீரர்

ரோஹித் துவக்க வீரர்

ரோஹித் சர்மா முதன் முறையாக டெஸ்ட் அணியில் துவக்க வீரராக களம் இறங்க உள்ளார். மாயங்க் அகர்வால் - ரோஹித் சர்மா ஜோடியும் முதன் முறையாக இந்திய அணிக்கு துவக்கம் அளிக்க உள்ளது.

இந்திய அணி விவரம்

இந்திய அணி விவரம்

இந்திய அணி - ரோஹித் சர்மா, மாயங்க் அகர்வால், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), அஜின்க்யா ரஹானே, ஹனுமா விஹாரி, அஸ்வின், ஜடேஜா, இஷாந்த் சர்மா, ஷமி

தென்னாப்பிரிக்கா அணி விவரம்

தென்னாப்பிரிக்கா அணி விவரம்

தென்னாப்பிரிக்கா அணி - எய்டன் மார்கிரம், டீன் எல்கர், டி ப்ருன், டெம்பா பவுமா, பாப் டு ப்ளேசிஸ் (கேப்டன்), டி காக், பிலாண்டர், செனுரான் முத்துசாமி, கேஷவ் மகாராஜ், டேன் பீடிட், காகிசோ ரபாடா

Story first published: Wednesday, October 2, 2019, 10:20 [IST]
Other articles published on Oct 2, 2019
English summary
IND vs SA : India vs South Africa first test toss decision and players list. Ashwin got in while Pant lose his spot in playing eleven.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+