Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐசிசி தரவரிசை.. ரஷீத் கானை பின்னுக்கு தள்ளிய இந்திய வீரர்.. முதலிடம் பிடித்து ரவி பிஷ்னாய் சாதனை!

மும்பை: ஐசிசி டி20 பவுலர்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் இளம் சுழற்பந்துவீச்சாளர் ரவி பிஷ்னாய் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. இந்த டி20 தொடரில் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய இளம் சுழற்பந்துவீச்சாளர் ரவி பிஷ்னாய் தொடர் நாயகன் விருதை கைப்பற்றி அசத்தினார். இந்திய அணிக்கு எப்போதெல்லாம் தேவைப்பட்டதோ அப்போதெல்லாம் விக்கெட்டுகளை வீழ்த்தினார் ரவி பிஷ்னாய்.

IND vs SA : Indian bowler Ravi Bishnoi becomes Number 1 T20 bowler in ICC Rankings

குறிப்பாக இந்த தொடரில் அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா உள்ளிட்ட பவர் பிளே பவுலர்கள் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் திணறிய நிலையில், பவர் பிளே ஓவர்களிலேயே அட்டாக்கில் வந்து விக்கெட்டை வீழ்த்தியவர் ரவி பிஷ்னாய். ஒவ்வொரு போட்டியிலும் முதல் ஓவரிலேயே விக்கெட்டை வீழ்த்துவதை வாடிக்கையாக வைத்திருந்தார் ரவி பிஷ்னாய்.

லெக் ஸ்பின்னர் என்றாலும் பெரியளவில் ஸ்பின் செய்யாமல் அதிகளவிலான கூக்ளி பந்துகளை வீசியே விக்கெட்டை வீழ்த்தி வருகிறார் ரவி பிஷ்னாய். சாஹலை போல் அல்லாமல் பந்தை நன்றாக காற்றில் பறக்கவிட்டு கொஞ்சம் கூடுதல் வேகத்தில் வீசுவதால் ரவி பிஷ்னாயின் கூக்ளிகளை கணிக்க முடியாமல் பேட்ஸ்மேன்கள் திணறி வருகின்றனர்.

இந்த நிலையில் ஐசிசி டி20 பவுலர்களுக்கான தரவரிசை பட்டியலில் 699 புள்ளிகளை பெற்று ரவி பிஷ்னாய் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். இதனால் ஆஃப்கானிஸ்தான் அணியின் ரஷீத் கான் 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் 3வது இடத்தில் ஹசரங்கா, 4வது இடத்தில் அடில் ரஷீத் மற்றும் 5வது இடத்தில் இலங்கை அணியின் தீக்சனா உள்ளனர்.

இவர்கள் 5 பேருமே ஸ்பின்னர்கள் என்பது தான் கூடுதல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் டாப் 10ல் மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளனர். அதேபோல் பேட்ஸ்மேன்களுக்கான டி20 தரவரிசையில் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தில் உள்ள நிலையில், பவுலர்களுக்கான தரவரிசையில் ரவி பிஷ்னாய் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். பும்ராவுக்கு பின் டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்த வீரர் என்ற சாதனையையும் ரவி பிஷ்னாய் படைத்துள்ளார்.

Story first published: Wednesday, December 6, 2023, 15:14 [IST]
Other articles published on Dec 6, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+