For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்!

Recommended Video

Rohit sharma double century| மறக்கவே முடியாத மாதிரி டபுள் செஞ்சுரி.. துள்ளிக் குதித்த ரசிகர்கள்!

ராஞ்சி : இந்திய வீரர் ஒருவர் சதம் அடிக்கும் நிலையில் இருந்த போது மழை தூறல் போட்டதால், மழையுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்.

மழை தொடர்ந்து தூறிக் கொண்டே இருந்த நிலையில், இனியும் பொறுக்க முடியாது என சிக்ஸ் அடித்து தன் சதத்தை எட்டினார்.

அந்த இந்திய வீரர் வேறு யாருமல்ல, சிக்ஸ் அடித்து இரட்டை சதம் அடித்த ரோஹித் சர்மா தான்.

வைரல் ஆன பேச்சுவார்த்தை

வைரல் ஆன பேச்சுவார்த்தை

அவர் இரட்டை சதம் அடிக்கும் முன், சதத்தை கடக்கும் போது தான் இந்த நிகழ்ச்சி நடந்துள்ளது. ரோஹித் சர்மா மழையிடம் பேச்சுவார்த்தை நடத்திய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விக்கெட் சரிவு

விக்கெட் சரிவு

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து ஆடியது. ரபாடா - நோர்ஜே வேகப் பந்துவீச்சில் இந்திய பேட்ஸ்மேன்கள் திணறினர். மயங்க் அகர்வால் 10, புஜாரா 0, கோலி 12 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

தடுமாறிய ரோஹித்

தடுமாறிய ரோஹித்

ரோஹித் சர்மாவும் துவக்கத்தில் பந்தை கணிக்க முடியாமல் தடுமாறி வந்தார். பல பந்துகள் எட்ஜ் ஆகி சென்றன. விக்கெட் வீழ்ச்சியை பார்த்த அவர் சுதாரித்து நிதானமாக ஆடினார்.

சிறப்பான கூட்டணி

சிறப்பான கூட்டணி

நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரோஹித் - ரஹானே கூட்டணி பொறுமையாக போட்டியை இந்தியா பக்கம் எடுத்து வந்தது. இருவரும் அரைசதம் கடந்து ஆடி வந்தனர்.

மழை தூறல்

மழை தூறல்

ரோஹித் சர்மா 95 ரன்கள் எடுத்து இருந்தார். அப்போது மழை தூறல் போடத் துவங்கியது. இந்தப் போட்டி நடக்கும் நாட்களில் மழை வரலாம் என கூறப்பட்டிருந்ததால் அப்போது போட்டி நிறுத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்தது.

ரோஹித் பேச்சுவார்த்தை

ரோஹித் பேச்சுவார்த்தை

அப்போது பரபரப்பாக இருந்த ரோஹித் சர்மா, பேட்ஸ்மேனுக்கு எதிர் முனையில் நின்று இருந்தார். அப்படியே வானத்தை பார்த்து "இப்ப வேண்டாம்... இப்ப வேண்டாம்" என கூறினார். அவர் பேச்சுவார்த்தை நடத்தியும் மழை நிற்கவில்லை.

சிக்ஸ் அடித்து சதம்

சிக்ஸ் அடித்து சதம்

சதம் எடுக்க 5 ரன்கள் வேண்டும் என்ற நிலையில் அடுத்த பந்திலேயே ரோஹித் சிக்ஸ் அடித்து அதிரடியாக சதத்தை எட்டினார். இது இந்த தொடரில் ரோஹித் அடித்த மூன்றாவது சதம் ஆகும்.

இரட்டை சதமும் சிக்ஸ் தான்

இரட்டை சதமும் சிக்ஸ் தான்

சதம் அடித்த பின்னும் அதிரடியாக ஆடிய ரோஹித், இரட்டை சதம் அடித்தார். இரட்டை சதத்தை நெருங்கி 199 ரன்கள் எடுத்து இருந்த போது உணவு இடைவேளை வந்தது. அதனால், நீண்ட நேரம் இரட்டை சதம் அடிக்க காத்திருந்த ரோஹித், சிக்ஸ் அடித்து இரட்டை சதம் கடந்து மீண்டும் மிரட்டினார்.

சேவாக் ஆட்டம்

சேவாக் ஆட்டம்

ரோஹித் சர்மாவின் பேட்டிங் ஸ்டைல் போலவே ரோஹித் சர்மா ஆடுவதாக பலரும் கூறத் துவங்கி உள்ளனர். சேவாக் மட்டுமே டெஸ்ட் போட்டிகளிலும் ஒருநாள் போட்டி போல அதிரடியாக ஆடுவார். அதே முறையை பின்பற்றி அதிரடி காட்டி, அவரது பிறந்த நாளில் சிக்ஸ் அடித்து இரட்டை சதம் எட்டி இருக்கிறார் ரோஹித்.

வைரல் ஆன வீடியோ

ரோஹித் சர்மா "இப்ப வேணாம்.. இப்ப வேணாம்" என மழையிடம் கேட்கும் வீடியோ வாட்ஸ்-அப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Story first published: Sunday, October 20, 2019, 20:20 [IST]
Other articles published on Oct 20, 2019
English summary
IND vs SA : Indian player Rohit Sharma talked with Rain to not to interfere his ton. In the next ball, he hit a six to complete his century.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+