Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA: பும்ரா, அக்சர் நீக்கம்..இந்திய அணியில் 2 மாற்றம்.. தென்னாப்பிரிக்க அணியில் 3 மாற்றம்

தர்மசலா: இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி தர்மசாலாவில் தொடங்கியது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில், மூன்றாவது போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனை அடுத்து பேசிய இந்திய அணி கேப்டன் சூரியகுமார் யாதவ், இந்த ஆடுகளும் பெரிய அளவில் மாறாது. ஆனால் இங்கு பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். தர்மசாலா எப்போதுமே ஒரு அழகான இடம். அழகான மக்கள் இருப்பார்கள்.

Ind vs sa

அவர்களுக்கு நல்ல பொழுதுபோக்கை நாங்கள் தர நினைக்கின்றோம். அனைத்து போட்டிகளுமே மிகவும் முக்கியம். இந்த போட்டியில் நாங்கள் நல்ல கம்பேக்கை கொடுக்க முயற்சி செய்கின்றோம். மூன்று மணி நேரமும் போட்டியில் நன்றாக விளையாட வேண்டும். எங்கள் அணியில் இன்று இரண்டு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

தனிப்பட்ட காரணங்களுக்காக பும்ரா மும்பை திரும்பியுள்ளார். இதனால் அவர் இந்த போட்டியில் பங்கேற்கவில்லை. அவருக்கு பதில் ஹர்ஷித் ரானா விளையாடுகிறார். அக்சர் பட்டேலுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அவருக்கு பதில் குல்தீப் விளையாடுகிறார் என்று கூறினார். இதனை தொடர்ந்து பேசிய தென்னாப்பிரிக்க அணி கேப்டன் மார்க்கரம், எங்கள் அணியிலும், இன்று மூன்று மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

கார்பின் போஷ், ஆன்ட்ரி நோக்கியா மற்றும் டிஸ்டன்ஸ் ஸ்டெப்ஸ் ஆகியோர் தென்னாப்பிரிக்க அணிக்கு திரும்பி இருக்கிறார்கள். தர்மசாலாவில் நான் இரண்டு முறை விளையாடி இருக்கின்றேன். பகல் நேரமோ, இரவு நேரமோ இந்த ஊரே அழகாக இருக்கும். நாங்கள் தொடர்ந்து ஒரே மாதிரி விளையாட விரும்புகின்றோம்.

முதல் போட்டியில் நாங்கள் நன்றாக விளையாடவில்லை. தற்போது முதலில் பேட்டிங் செய்கின்றோம். முதல் இரண்டு ஓவர்களில் ஆடுகளம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை பார்த்துவிட்டு, பின்னர் அதற்கு ஏற்ற வகையில் ரன்கள் குவிக்க வேண்டும் என நினைக்கின்றோம் என்று ஏய்டன் மார்க்கரம் கூறியுள்ளார். கில் தொடர்ந்து தடுமாறிய நிலையில் மூன்றாவது போட்டியிலும் அவருக்கே வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. சஞ்சு சாம்சன் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, December 14, 2025, 18:48 [IST]
Other articles published on Dec 14, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+