Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA: குள்ளன் என்று கிண்டல் செய்த பும்ரா.. தோல்விக்கு பின் நேரில் சென்று மன்னிப்பு

கொல்கத்தா: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் தென்னாப்பிரிக்க அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்று கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த தோல்வியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணி நான்காவது இடத்திற்கு சரிந்துள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியதற்கு தென் ஆப்பிரிக்க கேப்டன் பவுமா, இரண்டாவது இன்னிங்ஸில் அரை சதம் அடித்ததே காரணம்.

Bumrah apology to bavuma

மேலும் தென்னாப்பிரிக்கா அணியை சிங்கம்போல் மாற்றி வைத்திருந்தார். இதனால் இந்திய அணி கடும் நெருக்கடியை சந்தித்து தோல்வியை தழுவியது. இந்த தருணத்தில் முதல் இன்னிங்ஸில் பும்ரா பவுமாக்கு பந்து வீசியபோது எல்பிடபிள்யு அவுட் கேட்கலாமா வேண்டாமா என வீரர்களிடம் உரையாடினார்.

அப்போது பவுமா அருகில் சென்று இவர் குள்ளமாக தானே இருக்கிறார். இதனால் பந்து ஸ்டெம்புக்கு மேலே செல்ல வாய்ப்பு இல்லை என்று கூறினார். அதற்கு ஹிந்தியில் உயரம் குறைவாக இருப்பவர்களை தரம் தாழ்த்தி சொல்லும் வகையில் ஒரு வார்த்தையை பயன்படுத்தி பும்ரா பேசியிருந்தார். அது ஸ்டெம்ப் மைக்கில் பதிவானது.

இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றியை பெற்ற நிலையில், பும்ரா நேராக பவுமாவை சந்தித்து தோள் மீது கையில் போட்டு தாம் பயன்படுத்திய வார்த்தைக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக கூறினார். இதுவரை எந்தவித சர்ச்சையிலும் பும்ரா சிக்காத நிலையில் பவுமாவை கிண்டல் செய்ததாக தற்போது மாட்டியிருக்கிறார். எனினும் அதற்கு அவர் மன்னிப்பு கேட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, November 16, 2025, 23:34 [IST]
Other articles published on Nov 16, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+