Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA: கேப்டன் ரிஷப் பண்டா? இல்ல பும்ராவா? போட்டிக்கு நடுவே நடந்த சம்பவம்

கவுஹாத்தி: தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றது. இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா முன்னிலையில் உள்ளதால் இந்த போட்டியில் இந்தியா வென்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும்.

அது மட்டும் இல்லாமல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 7 போட்டிகளில் ஆவது இன்னும் வெற்றி பெற வேண்டும். இந்த நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக வெளியேறியதால் இந்த டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் முழுநேர கேப்டனாக செயல்படுகிறார்.

Ind vs sa

ரிஷப் பண்ட் அணியை வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் களத்தில் ஒரு வினோத சம்பவம் நடைபெற்றது. தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் முதல் விக்கெட்டுக்கு அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்து வந்தனர். அப்போது ட்ரிங்க்ஸ் பிரேக் எடுக்கப்பட்டது.

இந்த தருணத்தில் வீரர்களை ஒருங்கிணைத்த பும்ரா போட்டியில் எப்படி விளையாட வேண்டும். எவ்வாறு செயல்பட வேண்டும் என்று சக அணியினரிடம் பேசிய காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலானது. கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட், பும்ரா பேசியதை வீரர்களுடன் கேட்டுக் கொண்டிருந்தார்.

இதை குறிப்பிட்ட ரசிகர்கள் இந்திய அணிக்கு யார் கேப்டன் பும்ராவா? ரிஷப் பண்டா என கேள்வி எழுப்பி உள்ளனர். ரிஷப் பண்ட்டை விட சீனியர் வீரர் என்பதால் அணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தன்னுடைய பொறுப்பை உணர்ந்து கொஞ்சம் கூட ஈகோ இல்லாமல் செயல்பட்டு இருப்பதாக ரசிகர்கள் பாராட்டியுள்ளனர். அதே சமயம் ரிஷப் பண்ட்டை விட பும்ரா சீனியர் என்பதை உணர்ந்து அவருக்கு அந்த இடம் வழங்கியிருப்பதையும் ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.

இப்படித்தான் ஈகோ இல்லாமல் இந்திய அணி இருக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தேனீர் இடைவேளைக்கு முன்பு ஏய்டன் மார்க்கரம் 38 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா அபாரமாக பந்துவீசி அவரை போல்டாக்கினார். இதனால் தென்னாபிரிக்க அணி 82 ரன்களுக்கு ஒரு விக்கெட் இழந்து இருக்கிறது.

Story first published: Saturday, November 22, 2025, 11:21 [IST]
Other articles published on Nov 22, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+