Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA- 2வது டெஸ்டில் 5 விக்கெட் தேவை.. மாபெரும் சாதனை நோக்கி பும்ரா

மும்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் பும்ரா ஒரே இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருந்தார். இதன் மூலம் SENA நாடுகளுக்கு எதிராக அதிக முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய ஆசிய வீரர் என்ற பெருமை அவர் பெற்றார்.

இந்த நிலையில் கவுதாத்தியில் வெள்ளிக்கிழமை தொடங்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா மேலும் ஒரு சாதனையை எதிர்நோக்கி இருக்கிறார். கவுகாத்தியில் நடைபெறும் இந்த டெஸ்ட் போட்டியில் மொத்தமாக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினால் ஒரு மாபெரும் சாதனையை படைக்க இருக்கிறார்.

Ind vs sa Jasprit bumrah

அதாவது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை எடுத்த டாப் 10 வீரர்கள் பட்டியலில் பும்ரா இடம் பெறுவார். தற்போது பும்ரா 11-வது இடத்தில் இருக்கின்றார். இந்த நிலையில் ஐந்து விக்கெட்டுகளை அவர் கைப்பற்றினால், இந்திய ஜாம்பவான் ஸ்ரீநாத்தின் சாதனையை அவர் முறியடிக்க உள்ளார்.

ஸ்ரீநாத் இதுவரை 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 236 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். ஆனால் பும்ரா வெறும் 51 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 232 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இதனால் ஐந்து விக்கெட்டுகளை அவர் வீழ்த்தினால் ஸ்ரீநாத்தின் சாதனையை அவர் முறியடிப்பார். பும்ரா இதுவரை 16 முறை ஒரே இன்னிங்ஸில் 5 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்.

ஏழுமுறை நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த நிலையில் கவுகாத்தி ஆடுகளத்தில் பந்து நன்றாக திரும்பும் என்றாலும் ஆடுகளத்தில் பவுன்ஸ் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் பும்ரா ஐந்து விக்கெட்டுகள் எடுப்பது என்பது ஒரு எளிதான விஷயமாக பார்க்கப்படுகிறது. டாப் 10 டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் அணில் கும்ப்ளே 619 விக்கெட்களுடன் முதலிடத்தில் இருக்கிறார்.

அஸ்வின் 537 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்திலும், கபில்தேவ் 434 விக்கெட்களுடன் மூன்றாவது இடத்திலும், ஹர்பஜன் 417 விக்கெட்களுடன் நான்காவது இடத்திலும், ஜடேஜா 342 விக்கெட் உடன் 5வது இடத்திலும், இஷாந்த் சர்மா 311 விக்கெட் உடன் ஆறாவது இடத்திலும், ஜாகிர் கான் 311 விக்கெட்டுகளுடன் ஏழாவது இடத்திலும், பிசன் சிங் பேடி 242 விக்கெட்டுகளுடன் ஒன்பதாவது இடத்திலும், ஸ்ரீநாத் 236 விக்கெட்டுகளுடன் பத்தாவது இடத்திலும் உள்ளனர்.

Story first published: Thursday, November 20, 2025, 22:37 [IST]
Other articles published on Nov 20, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+