For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs SA: "அந்த துப்பாக்கியை கொடு எப்படி யூஸ் பண்றதுனு சொல்லி தரேன்".. கோலி, ரோகித் கீழ் மிரட்டிய பும்ரா

மும்பை: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்கு முக்கிய காரணம் பேட்டிங்கில் அதிக ரன்கள் அடிக்கப்பட்டதுதான். பும்ரா இருந்தும் தென்னாப்பிரிக்கா அணி 2013 ரன்களை எட்டியது.

இந்த போட்டியில் பும்ரா நான்கு ஓவர்கள் வீசி 45 ரன்கள் விட்டுக் கொடுத்து விக்கெட் எதுவும் வீழ்த்தாமல் இருந்தார். இந்த சூழலில் பும்ராவை சூரிய குமார் தவறாக பயன்படுத்தி வருகிறார் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி டி20 அணியின் கேப்டனாக இருந்தபோது பும்ராவை ஒரு சரியான ஆயுதமாக பயன்படுத்தி வந்தனர்.

Jasprit Bumrah

எப்போதெல்லாம் ரன்கள் கூட போகிறதோ அப்போதெல்லாம் பும்ரா பந்து வீச வருவார். குறிப்பாக டெத் ஓவர்களில் அவரை அதிகம் பயன்படுத்துவார்கள். ஆனால் தற்போது கம்பீர் வந்த பிறகு பும்ராவை பவர்பிளேவில் பயன்படுத்த சூரியகுமார் யாதவை வற்புறுத்துகிறார். இது அவருக்கு ஒரு புதிய ரோலாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் டி20 கிரிக்கெட் பொருத்தவரை புமரா எந்தந்த கேப்டனுக்கு கீழ் எவ்வாறு செயல்பட்டு இருக்கிறார் என்று தற்போது பார்க்கலாம். சூரியகுமார் யாதவ் கேப்டன்ஷி கீழ் பும்ரா 10 இன்னிங்ஸ் விளையாடி 12 விக்கெட் வீழ்த்திருக்கிறார். இதில் அவருடைய பந்துவீச்சு சராசரி 23 என்ற அளவில் எக்கனாமி 7.42 என்று அளவிலும் இருக்கின்றது.

ஆனால் விராட் கோலி கேப்டனாக இருந்தபோது பும்ரா 27 இன்னிங்சில் 31 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். அவருடைய பந்துவீச்சு சராசரி 20.45 என்று அளவில் எக்கனாமி 6.51 என்ற அளவில் மிரட்டலாக இருந்திருக்கிறது. இதேபோன்று தோனி கேப்டனாக இருந்தபோது பும்ரா 21 இன்னிங்சில் பந்துவீசி 28 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.

அவருடைய பந்துவீச்சு சராசரி 18.82 என்ற அளவில் இருக்கிறது. அவருடைய எக்னாமி 6.62 என்ற அளவில் உள்ளது. இதை போன்று ரோகித் சர்மா கேப்டன் ஆக இருந்தபோது, 19 இன்னிங்ஸ் விளையாடி உள்ள பும்ரா மொத்தமாக 26 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். அதில் அவருடைய சராசரி வெறும் 14.57 என்ற அளவிலும், எக்கனாமி 5.68 என்ற அளவில் உள்ளது.

இதை சுட்டிக்காட்டி உள்ள ரசிகர்கள் வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் வில்லனிடம் கமல், "அந்த துப்பாக்கிய என்கிட்ட கூடு, எப்படி சுடனும் நான் சொல்லி தரேன் என்று சொல்வாரோ, அதேபோல் பும்ராவை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று கூறி ரோகித் தோனியிடம் கற்றுக் கொள்ளுங்கள் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Story first published: Friday, December 12, 2025, 7:00 [IST]
Other articles published on Dec 12, 2025
English summary
Ind vs sa- Jasprit Bumrah Performance in T20 Under Different captains
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+