Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலககோப்பையை வெல்ல வேண்டுமா? அப்போ இந்த வீரரை பார்த்துக்கோங்க.. கம்பீருக்கு உத்தப்பா அறிவுரை

மும்பை: டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்பாக இந்திய அணி தற்போது தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இது தென்னாபிரிக்க தொடர் தற்போது முடிவடையும் நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான தொடர் ஜனவரி மாதம் நடக்க உள்ளது.

இந்த சூழலில் இந்திய அணி t20 உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் பும்ராவை சரியாக முறையில் கையாள வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் உத்தப்பா கூறியுள்ளார். பும்ரா, தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடினாலும் ஒரு நாள் தொடரில் ஓய்வு வழங்கப்பட்டது.

uthappa

இந்த சூழலில் டி20 தொடரில் தற்போது அவர் விளையாடுகிறார். இந்த நிலையில் நியூசிலாந்து தொடரிலும் அவர் இடம்பெற வாய்ப்புள்ளது. இந்த சூழலில் தான் ராபின் உத்தப்பா, பும்ராவின் பணிச் சுமையை சரியான முறையில் கையாள வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

இது குறித்து பேசிய அவர், பும்ரா ஒரு மேட்ச் வின்னர். அவருடைய பணிச்சுமையை நாம் சரியாக கையாள்வது தான் மிகவும் முக்கியம். கிரிக்கெட்டில் மிகவும் கடினமான பணி என்றால் அது வேகப்பந்து வச்சு தான். அதுவும் பும்ரா வேகமாக பந்து வீசுவதற்கு கடினமாக முயற்சிக்கின்றார். எனவே பும்ராவின் உடல் தகுதியை நாம் பாதுகாக்க வேண்டும்.

அதே சமயம், அவர் போதுமான அளவு கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி இருக்க வேண்டும். அவர் தனது அற்புதமான பந்துவீச்சை சில போட்டிகளில் தற்போது காட்டி வருகிறார். இன்னும் சில போட்டிகளில் விளையாடி அதை அவர் தொடர்ந்து செய்வார் என்று நம்புகிறோம் என்று உத்தப்பா கூறியுள்ளார். தற்போது நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர் வரும் ஜனவரி 21ஆம் தேதி தொடங்குகிறது.

இந்த போட்டிகள் ஜனவரி 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில் முதல் மூன்று டி20 போட்டிகளில் மட்டும் விளையாடினால் போதும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதேபோன்று இனி டெஸ்ட் தொடர் ஆறு மாதத்திற்கு கிடையாது என்பதால் முஹமது சிராஜை டி20 அணியில் சேர்க்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Story first published: Friday, December 19, 2025, 9:01 [IST]
Other articles published on Dec 19, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+