For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரே பந்தில் இரண்டு சாதனை.. சேவாக், சச்சினை ஓரங்கட்டி மிரள வைத்த கோலி!

Recommended Video

Virat Kohli 254 runs vs South Africa | 7வது இரட்டை சதம் அடித்தார் கோலி-வீடியோ

புனே: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் விராட் கோலி சச்சின், சேவாக்கின் இரட்டை சத சாதனையை முறியடித்தார்.

இந்தப் போட்டியில் விராட் கோலி இரட்டை சதம் அடித்ததோடு, டெஸ்ட் போட்டிகளில் 7,000 ரன்களை கடந்து மிரட்டினார்.

யாராலையும் அசைக்க முடியாது.. மீண்டும் நிரூபித்த கிங் கோலி.. டபுள் செஞ்சுரி அடித்து வெறியாட்டம்!யாராலையும் அசைக்க முடியாது.. மீண்டும் நிரூபித்த கிங் கோலி.. டபுள் செஞ்சுரி அடித்து வெறியாட்டம்!

இந்தியா அபார ஆட்டம்

இந்தியா அபார ஆட்டம்

இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 601 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. விராட் கோலி கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று 254 ரன்கள் எடுத்து இருந்தார்.

கோலி இரட்டை சதம்

கோலி இரட்டை சதம்

295 பந்தில் இரட்டை சதம் கடந்தார் கோலி. இது கோலியின் ஏழாவது இரட்டை சதம் ஆகும். அதே பந்திலேயே சர்வதேச டெஸ்ட் அரங்கில் 7,000 ரன்கள் என்ற மைல்கல்லையும் எட்டி அசத்தினார்.

பவுண்டரி மழை

பவுண்டரி மழை

இந்தப் போட்டியில் ஆட்டமிழக்காமல் 254 ரன்கள் அடித்த கோலி 33 ஃபோர் மற்றும் 2 சிக்ஸ் அடித்து இருந்தார். மிகவும் நிதான பேட்டிங் செய்த கோலி இரட்டை சதம் அடித்த பின் தான் மின்னல் வேகத்தில் ரன் குவித்தார். அதன் பின் தான் இரண்டு சிக்ஸ்களையும் அடித்தார்.

7 இரட்டை சதம்

7 இரட்டை சதம்

தன் ஏழாவது இரட்டை சதம் கடந்த விராட் கோலி, இந்திய அளவில் அதிக இரட்டை சதம் அடித்த டெஸ்ட் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்தப் பட்டியலில் இதற்கு முன் முதல் இடத்தில் இருந்த சச்சின், சேவாக்கை முந்தி அசத்தி இருக்கிறார்.

சச்சின், சேவாக் இரட்டை சதங்கள்

சச்சின், சேவாக் இரட்டை சதங்கள்

சச்சின் டெண்டுல்கர், சேவாக் இருவரும் டெஸ்ட் போட்டிகளில் ஆறு இரட்டை சதங்கள் அடித்து இருக்கின்றனர். அவர்களை முந்தி ஏழு இரட்டை சதங்களுடன் கோலி முதல் இடத்தை தனியாக பிடித்துள்ளார். ராகுல் டிராவிட் ஐந்து, கவாஸ்கர் நான்கு இரட்டை சதங்கள் அடித்து உள்ளனர்.

உலக அளவில் கோலி

உலக அளவில் கோலி

உலக அளவில் அதிக இரட்டை சதம் அடித்தவர்கள் பட்டியலில் மகிளா ஜெயவர்தனே, வாலி ஹாமொன்ட் ஆகியோருடன் நான்காம் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார் விராட் கோலி. முதல் மூன்று இடங்களில் டான் பிராட்மேன் 12, சங்ககாரா 11, பிரையன் லாரா 9 உள்ளனர்.

எந்த நாடுகள்?

எந்த நாடுகள்?

இந்த ஏழு இரட்டை சதங்களில் கோலி இலங்கை அணிக்கு எதிராக இரண்டு முறையும், இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், வெ.இண்டீஸ் அணிகளுக்கு எதிராக தலா ஒரு முறையும் இரட்டை சதம் அடித்துள்ளார்.

ஆஸ்திரேலியா தவிர..

ஆஸ்திரேலியா தவிர..

முக்கியமான டெஸ்ட் போட்டி ஆடும் நாடுகளில் ஆஸ்திரேலிய அணி தவிர, மற்ற அணிகள் அனைத்திற்கு எதிராகவும் கோலி இரட்டை சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

7000 ரன்கள்

7000 ரன்கள்

இரட்டை சதம் அடித்த அதே பந்தில் 7,000 ரன்களை கடந்த கோலி, அதிலும் முக்கிய் சாதனை புரிந்துள்ளார். இந்திய அளவில் 7,000 ரன்களை கடந்த ஏழாவது வீரர் கோலி ஆவார். கோலிக்கு முன்னதாக சச்சின், டிராவிட், கவாஸ்கர், லக்ஷ்மன், சேவாக், கங்குலி ஆகியோர் மட்டுமே டெஸ்ட் போட்டிகளில் 7,000 ரன்களை கடந்துள்ளனர்.

சேவாக், சச்சின் தான் டாப்

சேவாக், சச்சின் தான் டாப்

மிக விரைவாக 7,000 ரன்களை கடந்த வீரர்களில் கோலி நான்காம் இடம் மட்டுமே பிடித்தார். 138 இன்னிங்க்ஸ்களில் கோலி 7,000 ரன்களை கடந்தார். அவருக்கு முன் வாலி ஹாமொன்ட் (131), சேவாக் (134), சச்சின் (136) உள்ளனர். இந்த சாதனையில் சச்சின், சேவாக்கை கோலியால் முந்த முடியவில்லை.

Story first published: Friday, October 11, 2019, 17:40 [IST]
Other articles published on Oct 11, 2019
English summary
IND vs SA : Kohli breaks records with this seventh double century. He also goes past Sachin and Sehwag in number of double century among Indian players.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X