Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தண்ணி காட்டிய 2 வீரர்கள்.. வேற வழியே இல்லாமல் ரோஹித்தை அழைத்த கோலி.. என்ன ஆச்சு?

Recommended Video

Kohli ask rohit to bowl | ரோஹித் சர்மாவை பந்து வீச சொன்ன கோலி-வீடியோ

விசாகப்பட்டினம் : தென்னாப்பிரிக்க வீரர்கள் சிறப்பாக ஆடி விக்கெட் விழாமல் நீண்ட கூட்டணி அமைத்தனர்.

அவர்களை பிரிக்க முடியாத நிலையில், கேப்டன் விராட் கோலி, ரோஹித் சர்மாவை நீண்ட காலம் கழித்து பந்து வீச அழைத்தார்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே ஆன முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்க்ஸில் 502 ரன்கள் குவித்தது.

தென்னாப்பிரிக்கா பேட்டிங்

தென்னாப்பிரிக்கா பேட்டிங்

முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங் தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணி துவக்கத்தில் மூன்று விக்கெட்கள் இழந்து தவித்தது. மூன்றாம் நாள் துவக்கத்தில் நான்காவது விக்கெட்டையும் இழந்து, 63 ரன்களுக்கு 4 விக்கெட்கள் என்ற மோசமான நிலையில் இருந்தது.

எல்கர் - பாப் கூட்டணி

எல்கர் - பாப் கூட்டணி

அப்போது துவக்க வீரர் டீன் எல்கர் மற்றும் பாப் டு ப்ளேசிஸ் ஜோடி சேர்ந்து அணியை மீட்டனர். பாப் டு ப்ளேசிஸ் 55 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து டி காக் ஆட வந்தார்.

எல்கர் - டி காக் கூட்டணி

எல்கர் - டி காக் கூட்டணி

முதல் கூட்டணியே பரவாயில்லை என்று கூறும் அளவிற்கு, எல்கர் - டி காக் ஜோடி இந்திய அணியை தவிக்க விட்டது. 150 ரன்களுக்கும் மேல் குவித்தது இந்த ஜோடி. இருவருமே சதம் அடித்து அசத்தினர்.

போராடிய இந்திய அணி

போராடிய இந்திய அணி

இவர்களை பிரிக்க முடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் தடுமாறினர். ஷமி, இஷாந்த் சர்மா, அஸ்வின், ஜடேஜா ஹனுமா விஹாரி என ஐந்து பந்துவீச்சாளர்களும் முயற்சி செய்த நிலையில், கேப்டன் கோலி வேறு வழியின்றி அடுத்து ரோஹித் சர்மாவை அழைத்தார்.

ரோஹித் சர்மா பவுலிங்

ரோஹித் சர்மா பவுலிங்

நீண்ட காலமாக பவுலிங் போடாத நிலையில், அதற்கான பயிற்சியும் செய்யாத நிலையில் திடீரென ரோஹித் சர்மாவிடம் பந்தை கொடுத்தார் கோலி. ரோஹித் சர்மா இரண்டு ஓவர்கள் மட்டுமே வீசினார். ஏழு ரன்கள் மட்டுமே கொடுத்து இருந்தார்.

மெய்டன் ஓவர்

மெய்டன் ஓவர்

அவரது முதல் ஓவர் மெய்டன் என்பது குறிப்பிடத்தக்கது. டி காக் சந்தித்த 77வது ஓவரை வீசிய ரோஹித் சர்மா, மெய்டன் ஓவராக வீசி வியக்க வைத்தார். அதன் பின் 79வது ஓவரில் ஒரு பவுண்டரி உட்பட ஏழு ரன்கள் கொடுத்தார்.

மூன்று ஆண்டுகள்

மூன்று ஆண்டுகள்

சுமார் மூன்று ஆண்டுகள் கழித்து சர்வதேச அரங்கில் பந்து வீசி இருக்கிறார் ரோஹித் சர்மா. கடைசியாக 2016இல் தான் ரோஹித் சர்மா பந்து வீசி இருக்கிறார். அதன் பின் இப்போது தான் ரோஹித் பந்து வீசினார்.

அஸ்வின் 5 விக்கெட்கள்

அஸ்வின் 5 விக்கெட்கள்

இந்தப் போட்டியில் அஸ்வின் முதல் இன்னிங்க்ஸில் 5 விக்கெட் வீழ்த்தினார். மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் தென்னாப்பிரிக்கா 8 விக்கெட் இழப்பிற்கு 385 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணியை விட 117 ரன்கள் மட்டுமே பின்தங்கி உள்ளது.

Story first published: Friday, October 4, 2019, 18:24 [IST]
Other articles published on Oct 4, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+