Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

14 ஆண்டுக்கு பின்.. சொந்த மண்ணில் உலகக்கோப்பையை வென்ற இந்தியா.. தோனி வழியில் சாதித்த ஹர்மன்ப்ரீத்!

மும்பை: 2011ஆம் ஆண்டு இந்திய ஆடவர் அணி சொந்த மண்ணில் நடந்த உலகக்கோப்பையை வென்றதை போல், 2025ஆம் ஆண்டு மகளிர் உலககோப்பையை இந்திய அணி வென்று புதிய வரலாறு படைத்துள்ளது. இதன் மூலமாக சொந்த மண்ணில் உலகக்கோப்பையை வென்ற 2வது இந்திய கேப்டன் என்ற பெருமையை ஹர்மன்ப்ரீத் கவுர் பெற்றுள்ளார்.

மகளிர் உலகக்கோப்பைத் தொடரில் தென்னாப்பிரிக்கா அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 298 ரன்களை குவித்தது. இதன்பின் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 246 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது.

IND vs SA

இந்திய அணி தரப்பில் தீப்தி சர்மா பேட்டிங்கில் 58 பந்துகளில் 58 ரன்கள் விளாசியதோடு, பவிலிங்கில் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதித்துள்ளார். இதன் மூலமாக இந்திய அணி உலகக்கோப்பைத் தொடரை முதல்முறையாக கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இந்திய மகளிர் அணியின் இந்த வெற்றி ஒட்டுமொத்த இந்திய மகளிர் கிரிக்கெட்டையும் மாற்றும் வகையில் அமைந்துள்ளது.

அதேபோல் சொந்த மண்ணில் நடந்த உலகக்கோப்பைத் தொடரை இந்திய மகளிர் அணி வென்று வரலாறு படைத்திருக்கிறது. இந்திய மண்ணில் நடந்த ஐசிசி தொடர்களில் கடைசியாக இந்திய ஆடவர் அணி 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்தது. தோனி தலைமையிலான இந்திய அணி இந்த வரலாற்றை படைத்தது.

அதன்பின் 2023ஆம் ஆண்டு இந்திய மண்ணில் நடந்த உலகக்கோப்பைத் தொடரில், ஆஸ்திரேலியா அணியிடம் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்த நிலையில் தோனியின் ஸ்டைலில் இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் சொந்த மண்ணில் நடந்த உலகக்கோப்பைத் தொடரை வென்று சாதித்துள்ளார். இதன் மூலமாக சொந்த மண்ணில் உலகக்கோப்பையை வென்ற 2வது கேப்டன் என்ற பெருமையை ஹர்மன்ப்ரீத் கவுர் பெற்றுள்ளார்.

Story first published: Monday, November 3, 2025, 0:22 [IST]
Other articles published on Nov 3, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+