For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இப்பதான் டீமுக்குள்ள வந்தாரு.. அதுக்குள்ள டபுள் செஞ்சுரியா? ரோஹித் சர்மாவை ஓரங்கட்டிய இளம் வீரர்!

Recommended Video

IND VS SA | Mayank Agarwal Hits Maiden Double-Century | முதல் இரட்டை சதம் அடித்த மயங்க்!-வீடியோ

விசாகப்பட்டினம் : இந்தியா - தென்னாப்பிரிக்கா மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்து மிரட்டினார் இளம் வீரர் மாயங்க் அகர்வால்.

அணிக்கு வந்து சில மாதங்களே ஆன நிலையில், தன் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்து அணியில் தன் இடத்தை நிரந்தரம் ஆக்கி இருக்கிறார் மாயங்க் அகர்வால்.

தென்னாப்பிரிக்கா டெஸ்ட்

தென்னாப்பிரிக்கா டெஸ்ட்

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. முதல் நாள் போட்டி மழையால் பாதிக்கப்பட்டது. அதற்கு முன்னரே இந்தியா விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் குவித்தது.

ரோஹித் அபாரம்

ரோஹித் அபாரம்

ரோஹித் சர்மா அதிரடியாக சதம் அடித்து அசத்தினார். எல்லோரும் ரோஹித் சர்மா பற்றியே பேசி வந்தனர். இரண்டாம் நாள் ஆட்டத்தில் ரோஹித் 176 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவருக்கு அடுத்து மாயங்க் அகர்வால் அடித்த சதம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

ஓரங்கட்டிய மாயங்க்

ஓரங்கட்டிய மாயங்க்

இந்த நிலையில், தொடர்ந்து பேட்டிங் செய்த மாயங்க் அகர்வால் தன் முதல் டெஸ்ட் சதத்தை இரட்டை சதமாக மாற்றி அசத்தினார். தான் ஆடும் எட்டாவது டெஸ்ட் இன்னிங்க்ஸில் இரட்டை சதம் அடித்து ரோஹித் பற்றியே பேசியவர்களை தன்னைப் பற்றியும் பேச வைத்தார் இந்த இளம் வீரர்.

முதல் சதம் + சாதனை

முதல் சதம் + சாதனை

தன் முதல் டெஸ்ட் சதம் + இரட்டை சதம் அடித்த மாயங்க் அகர்வால் பல சாதனைகளை செய்தார். இந்திய அளவில் தன் முதல் சதத்தை, இரட்டை சதமாக மாற்றிய நான்காவது வீரர் ஆவார்.

கூட்டணி சாதனை

கூட்டணி சாதனை

மேலும், ரோஹித் சர்மாவுடன் இணைந்து 317 ரன்கள் குவித்தார் மாயங்க். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த வரிசையில் மூன்றாவது இடத்தை பிடித்தது. மேலும், உலக அளவில் 12வது அதிகபட்ச கூட்டணி ரன்களை பதிவு செய்தது.

ஆஸ்திரேலியாவில் அறிமுகம்

ஆஸ்திரேலியாவில் அறிமுகம்

மாயங்க் அகர்வால் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் பாதியில் அணியில் சேர்க்கப்பட்டார். அதே தொடரில் துவக்க வீரராக அறிமுகம் ஆனார். இரண்டு போட்டிகளில் ஆடிய அவர் 76 மற்றும் 77 ரன்கள் அடித்து அசத்தினார்.

வெஸ்ட் இண்டீஸ் தடுமாற்றம்

வெஸ்ட் இண்டீஸ் தடுமாற்றம்

அதன் பின் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்ற அவர் மூன்று இன்னிங்க்ஸ்களில் சரியாக ரன் குவிக்கவில்லை. ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடித்து இருந்தார். இந்த நிலையில், தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் இரட்டை சதம் அடித்து இருக்கிறார்.

இனி நிரந்தரம்

இனி நிரந்தரம்

இந்த இரட்டை சதம் மூலம் டெஸ்ட் அணியில் நிரந்தர இடத்தை பிடித்துள்ளார் மாயங்க் அகர்வால். அதே போல, ரோஹித் சர்மாவும் துவக்க வீரராக தன் முதல் டெஸ்டில் சதம் அடித்து, 176 ரன்கள் வரை குவித்து அணியில் தன் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

Story first published: Thursday, October 3, 2019, 17:56 [IST]
Other articles published on Oct 3, 2019
English summary
IND vs SA : Mayank Agarwal hit double century in his 8th test innings. He also became fourth Indian player to convert his first test hundred into a double century.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+