Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA: வெறும் 3 சிக்சர் தான் தேவை.. 11 சாதனை படைக்க போகும் ரோகித் சர்மா.. தென்னாப்பிரிக்க தொடரில் வாய்ப்பு

ராஞ்சி: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோகித் சர்மா விளையாட உள்ளார்.இதன் மூலம் ஒரு மாதத்திற்கு பின் சர்வதேச கிரிக்கெட்டில் ரோகித் சர்மா திரும்பி இருக்கின்றார். அண்மையில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் 38 வயதான ரோஹித் சர்மா சதம் அடித்து அசத்தினார்.

முதல் ஒருநாள் போட்டியில் 8 ரன்களும், இரண்டாவது ஒருநாள் போட்டியில் 73 ரன்களும், மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆட்டம் இழக்காமல் 121 ரன்களையும் ரோகித் சர்மா குவித்திருந்தார். இதன் மூலம் தொடர் நாயகன் விருதை வென்ற ரோகித் சர்மா ஐசிசி தரவரிசை பட்டியலிலும் நம்பர் 1 இடத்தை பிடித்தார்.

Rohit sharma

இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டியில் ரோகித் சர்மா பல்வேறு சாதனைகளை படைக்க வாய்ப்பு இருக்கிறது. அது என்னவென்று தற்போது பார்க்கலாம். ரோகித் சர்மா இந்த தொடரில் வெறும் மூன்று சிக்சர் அடித்தால் ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற உலக சாதனையை அவர் படைப்பார்.

இதேபோன்று இந்த ஒரு நாள் தொடரில் மொத்தமாக அவர் 7 சிக்ஸர் அடித்தால், சர்வதேச கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற பெருமை ரோகித் சர்மாவுக்கு கிடைக்கும். இதேபோன்று இந்த தொடரில் ரோஹித் சர்மா மொத்தம் 98 ரன்கள் அடித்தால் சர்வதேச கிரிக்கெட்டில் 20000 ரன்களை தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தொட்ட வீரர் என்ற மைல் கல்லை அடைவார்.

அதேபோன்று இந்த தொடரில் 213 ரன்கள் அவர் குவித்தால், சர்வதேச கிரிக்கெட்டில் 16 ஆயிரம் ரன்களைத் தொட்ட தொடக்க வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார். தென்னாப்பிரிக்கா தொடரில் ஒரு சதம் ரோகித் சர்மா அடித்தால், தொடக்க வீரராக அதிக சதம் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனை அவருக்கு கிடைக்கும். இதேபோன்று ரோகித் சர்மா மேலும் 8 சிக்சர்களை அடித்தால் ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக சிக்சரை அடித்த தொடக்க வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைக்கும்.

ரோகித் சர்மா 115 ரன்கள் அடித்தால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த இந்திய தொடக்க வீரர் என்று பெருமை அவருக்கு கிடைக்கும். ரோகித் சர்மா வெறும் 27 ரன்கள் எடுத்தால், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2000 ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைப்பார்.

இதைப் போன்று ரோகித் சர்மா இந்த தொடரில் 133 ரன்கள் அடித்தால் இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 5 ஆயிரம் ரன்கள் அடித்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார்.ஒரு நாள் தொடரில் இந்தியா வெற்றி பெறும் போட்டியில் ரோகித் சர்மா 70 ரன்கள் அடித்தால் ஆசிய அளவில் வெற்றி பெறும் போட்டிகளில் 12 ஆயிரம் ரன்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா படைப்பார். இதே போன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 76 ரன்கள் அடித்தால் SENA நாடுகளுக்கு எதிராக 5 ஆயிரம் ரன்கள் எடுத்த இரண்டாவது ஆசிய தொடக்க வீரர் என்ற பெருமையை அவர் படைப்பார்.

Story first published: Saturday, November 29, 2025, 10:58 [IST]
Other articles published on Nov 29, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+