For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

யாரும் நெருங்க முடியாத டான் பிராட்மேன் ரெக்கார்டு.. அசால்ட்டாக உடைத்து கெத்து காட்டிய இந்திய வீரர்!

Recommended Video

Rohit Sharma breaks Don Bradman's record | பிராட்மேனின் சாதனையை முறியடித்தார் ரோஹித்

ராஞ்சி : ஆஸ்திரேலிய ஜாம்பவான் பேட்ஸ்மேன் டான் பிராட்மேனின் பேட்டிங் சராசரி சாதனை ஒன்றை முறியடித்து இருக்கிறார் இந்திய வீரர் ரோஹித் சர்மா.

வேறு யாரும் டான் பிராட்மேனின் சொந்த மண் பேட்டிங் சராசரிக்கு அருகில் கூட வர முடியாத நிலையில், ரோஹித் சர்மா அதை எட்டிப் பிடித்து முறியடித்து வியப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா 500 ரன்களுக்கும் மேல் குவித்து இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்.

ரோஹித் பேட்டிங்

ரோஹித் பேட்டிங்

தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மாவின் பேட்டிங் மிக அபாரமாக இருந்தது. இந்த தொடரில் மூன்று சதங்கள் அடித்துள்ள அவர், அதில் ஒரு இரட்டை சதமும் அடித்துள்ளார்.

துவக்க வீரர் வாய்ப்பு

துவக்க வீரர் வாய்ப்பு

இந்த தொடருக்கு முன்பு வரை ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் மிடில் ஆர்டர் வீரராகவே பார்க்கப்பட்டார். முதன்முறையாக டெஸ்ட் போட்டியில் துவக்க வீரராக வாய்ப்பு பெற்றார் ரோஹித்.

இரண்டு சதங்கள்

இரண்டு சதங்கள்

துவக்க வீரராக தன் முதல் டெஸ்டில் இரண்டு இன்னிங்க்ஸ்களிலும் சதம் அடித்து மிரட்டினார். அப்போதே ரோஹித் சர்மா பல சாதனைகளை உடைத்தார். குறிப்பாக ஒரே டெஸ்ட் போட்டியில் அதிக சிக்ஸ் அடித்த வீரர் என்ற சாதனையை உடைத்து முதல் இடத்தை பிடித்தார்.

இரட்டை சதம் அடித்தார்

இரட்டை சதம் அடித்தார்

இரண்டாவது போட்டியில் 14 ரன்கள் மட்டுமே எடுத்த அவர், மூன்றாவது டெஸ்டில் முதல் இன்னிங்க்ஸில் இரட்டை சதம் அடித்து மிரட்டினார். இது தான் ரோஹித் டெஸ்ட் போட்டியில் அடிக்கும் முதல் இரட்டை சதம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய மண்ணில் ரோஹித்

இந்திய மண்ணில் ரோஹித்

இந்திய மண்ணில் ரோஹித் சர்மா மிகச் சிறப்பாக ரன் குவித்துள்ளார். 18 இன்னிங்க்ஸ்களில் ஆறு சதம், ஐந்து அரைசதம் அடித்துள்ளார். சொந்த மண்ணில் ஆடிய கடைசி ஒன்பது இன்னிங்க்ஸ்களில் மட்டும் ரோஹித் நான்கு சதம், நான்கு அரைசதம் அடித்துள்ளார்.

பேட்டிங் சராசரி

பேட்டிங் சராசரி

இந்திய மண்ணில் 18 டெஸ்ட் இன்னிங்க்ஸ்களில் அடித்து இருக்கும் ரோஹித் சர்மாவின் பேட்டிங் சராசரி 99.84 ஆகும். இதன் மூலம், டான் பிராட்மேனின் சொந்த மண் சாதனையை, முறியடித்து இருக்கிறார் ரோஹித் சர்மா.

டான் பிராட்மேன் சராசரி

டான் பிராட்மேன் சராசரி

டான் பிராட்மேன் தன் சொந்த மண்ணில் ஆடிய 50 இன்னிங்க்ஸ்களில் 4,322 ரன்கள் குவித்துள்ளார். அவரது சொந்த மண் பேட்டிங் சராசரி 98.22 ஆகும். அதை சிறிய வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறார் ரோஹித்.

நீடிப்பது கடினம்

நீடிப்பது கடினம்

ரோஹித் சர்மா தற்போது டான் பிராட்மேன் சாதனையை முறியடித்து இருந்தாலும், இதை தக்க வைத்துக் கொள்வது மிகவும் கடினம். அதற்கு இந்திய மண்ணில் ஆடும் ஒவ்வொரு போட்டியிலும் ரோஹித் 100 ரன்களுக்கும் மேல் அடித்து இருக்க வேண்டும் அல்லது ஆட்டமிழக்காமல் இருக்க வேண்டும்.

ஒட்டு மொத்த சராசரி

ஒட்டு மொத்த சராசரி

சொந்த மண்ணில் அதிக சாராசரி வைத்திருக்கும் ரோஹித் சர்மா, ஒட்டுமொத்தமாக 30 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 2019 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதன் சராசரி 46.95 மட்டுமே.

அதிகரித்த சராசரி

அதிகரித்த சராசரி

தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் மட்டும் ரோஹித் 500 ரன்களுக்கும் மேல் குவித்துள்ள நிலையில், அவரது பேட்டிங் சராசரி 44க்கும் கீழ் இருந்து அதிரடியாக உயர்ந்துள்ளது.

Story first published: Monday, October 21, 2019, 12:59 [IST]
Other articles published on Oct 21, 2019
English summary
IND vs SA : Rohit Sharma beat Don Bradman average in home tests by a small margin. No one else near this massive record.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+