Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெஸ்ட் மேட்ச்சா இருந்தா என்ன? அப்படிதான் ஆடுவேன்.. அடம் பிடித்த இந்திய வீரர்.. சிக்ஸரில் புது வரலாறு

Recommended Video

Rohit breaks new sixer record | சிக்ஸரில் புது வரலாறு படைத்தார் ரோஹித் சர்மா

விசாகப்பட்டினம் : இந்திய வீரர் ரோஹித் சர்மா துவக்க வீரராக தன் முதல் டெஸ்ட் போட்டியில் பல சாதனைகளை படைத்தது வரலாறை மாற்றி வருகிறார்.

அந்த வரிசையில் டி20யில் சிக்ஸர் மன்னனான அவர், டெஸ்ட் போட்டியிலும் அதே பதில் சென்று சிக்ஸரில் புதிய சாதனை படைத்துள்ளார்.

இந்திய வீரர்களில் யாரும் செய்யாத ஒரு சாதனையை செய்து மிரட்டி இருக்கிறார் ரோஹித் சர்மா.

துவக்க வீரர் வாய்ப்பு

துவக்க வீரர் வாய்ப்பு

டெஸ்ட் போட்டிகளில் முதன் முறையாக துவக்க வீரராக ஆடும் வாய்ப்பை, இந்த தென்னாப்பிரிக்க தொடரின் முதல் டெஸ்டில் பெற்றார் ரோஹித் சர்மா. இதற்கு முன் அவர் டெஸ்ட் போட்டிகளில் மிடில் ஆர்டரில் மட்டுமே ஆடி வந்தார்.

அதிரடி ஆட்டம் கூடாது

அதிரடி ஆட்டம் கூடாது

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அதிரடி மன்னனாக ஆடும் ரோஹித் சர்மா, டெஸ்ட் போட்டிகளில் அடக்கி வாசிக்க வேண்டும். அடித்து ஆட அவசரப்பட்டு விக்கெட்டை பறிகொடுக்கக் கூடாது என முன்னாள் வீரர்கள், விமர்சகர்கள் கூறி வந்தனர்.

சிக்ஸர் சாதனை

சிக்ஸர் சாதனை

ஆனால், போட்டியின் துவக்கத்தில் சில ஓவர்கள் வரை அடக்கி வாசித்த ரோஹித் சர்மா, சுழற் பந்துவீச்சாளர்கள் ஓவர்களை வெளுத்து வாங்கினார். முதல் இன்னிங்க்ஸ், இரண்டாம் இன்னிங்க்ஸ் இரண்டிலும் சிக்ஸ் மழை பொழிந்து புதிய சாதனை படைத்துள்ளார்.

முதல் இன்னிங்க்ஸ் சதம்

முதல் இன்னிங்க்ஸ் சதம்

முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்க்ஸில் ரோஹித் அதிரடியாக ஆடி சதம் அடித்தார். 176 ரன்கள் குவித்த அவர் துவக்க வீரராக தன் முதல் டெஸ்டில் சதம் கடந்து ஆச்சரியம் அளித்தார். இது மூன்று ஆண்டுகள் கழித்து டெஸ்ட் போட்டியில் அவர் அடிக்கும் சதம்.

ஆறு சிக்ஸ்

ஆறு சிக்ஸ்

முதல் இன்னிங்க்ஸில் ஆறு சிக்ஸ் அடித்து இருந்தார் ரோஹித் சர்மா. அப்போதே சேவாக் மாதிரி ஆடுகிறார் ரோஹித். டெஸ்ட் அணியில் சேவாக் விட்டுச் சென்ற இடத்தை நிரப்ப இவர்தான் சரியான தேர்வு என பாராட்டப்பட்டார்.

இரண்டாம் இன்னிங்க்ஸ் அதிரடி

இரண்டாம் இன்னிங்க்ஸ் அதிரடி

அடுத்து, இரண்டாம் இன்னிங்க்ஸ் பேட்டிங்கிலும் கலக்கிய ரோஹித் அரைசதம் கடந்து ஆடினார். இரண்டாம் இன்னிங்க்ஸில் அவர் 4 சிக்ஸ் அடித்த போது, சிக்ஸரில் புதிய சாதனை படைத்தார்.

புதிய டெஸ்ட் சாதனை

புதிய டெஸ்ட் சாதனை

சுமார் 25 ஆண்டுகள் சிக்ஸர் சாதனை ஒன்றை உடைத்தார் ரோஹித். 1994ஆம் ஆண்டு நவ்ஜோத் சிங் சித்து இலங்கை அணிக்கு எதிரான டெஸ்டில் 8 சிக்ஸ் அடித்து இருந்தார். அந்த சாதனையை உடைத்தார் ரோஹித்.

மூன்றிலும் முதல் இடம்

மூன்றிலும் முதல் இடம்

ஆனால், அது மட்டுமே அவர் செய்த சாதனை அல்ல. இந்திய அளவில் ஒரே நேரத்தில் மூன்று வித கிரிக்கெட் வடிவங்களிலும் ஒரே போட்டியில் அதிக சிக்ஸ் அடித்துள்ள வீரர் ரோஹித் சர்மா தான்.

எத்தனை சிக்ஸ்?

எத்தனை சிக்ஸ்?

டெஸ்ட் போட்டிகளில் 9 சிக்ஸ் அடித்துள்ள ரோஹித், ஒருநாள் போட்டிகளில் 16 சிக்ஸர்களும், டி20 போட்டிகளில் 10 சிக்ஸர்களும் அடித்து இந்திய அளவில் மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் முதல் இடத்தை பிடித்துள்ளார் இந்த சிக்ஸர் மன்னன்.

இது ஆரம்பம் தான்

இது ஆரம்பம் தான்

டெஸ்ட் போட்டியில் ரோஹித் துவக்க வீரராக தன் முதல் போட்டியில் இப்போது தான் அடி எடுத்து வைத்துள்ளார். விரைவில் அவரது விஸ்வரூபத்தை காணலாம். இன்னும் பல சிக்ஸர் சாதனைகளை அவர் முறியடிக்க வாய்ப்புள்ளது.

Story first published: Saturday, October 5, 2019, 15:45 [IST]
Other articles published on Oct 5, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+