For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கெட்ட வார்த்தையில் திட்டு வாங்கிய டெஸ்ட் மன்னன்.. கோலியாக மாறிய ரோஹித் சர்மா.. அதிர்ச்சி சம்பவம்!

Recommended Video

Rohit Sharama scolds Pujara | கெட்ட வார்த்தையில் திட்டு வாங்கிய புஜாரா...அதிர்ச்சி சம்பவம்!

விசாகப்பட்டினம் : முதல் டெஸ்ட் போட்டியின் இடையே ரோஹித் சர்மா, டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் ஆன புஜாராவை கெட்ட வார்த்தையில் திட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே ஆன முதல் டெஸ்ட் போட்டி முடிவை நோக்கி பயணித்து வருகிறது.

நான்காம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி விரைவாக ஆடி தென்னாப்பிரிக்கா அணிக்கு பெரிய இலக்கை நிர்ணயிக்க முடிவு செய்தது. அப்போது தான் ரோஹித் சர்மா, புஜாராவை திட்டிய சம்பவம் நடந்தது.

முதல் இன்னிங்க்ஸ் ஆட்டம்

முதல் இன்னிங்க்ஸ் ஆட்டம்

இந்தியா முதல் இன்னிங்க்ஸில் 502 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. அடுத்து ஆடிய தென்னாப்பிரிக்க அணி முதலில் தடுமாறினாலும், பின்னர் பாப் டு ப்ளேசிஸ், எல்கர், டி காக் ஆகியோரின் ஆட்டத்தால் மீண்டு 431 ரன்கள் குவித்தது.

இரண்டாம் இன்னிங்க்ஸ் திட்டம்

இரண்டாம் இன்னிங்க்ஸ் திட்டம்

இந்தியா 71 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், விரைவாக ரன் சேர்த்து தென்னாப்பிரிக்க அணிக்கு பெரிய இலக்கை நிர்ணயிக்க இந்தியா திட்டமிட்டது. ரோஹித் சர்மா முதல் இன்னிங்க்ஸ் போல, இரண்டாம் இன்னிங்க்சிலும் கலக்குவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

மாயங்க் அவுட்

மாயங்க் அவுட்

மற்றொரு துவக்க வீரர் மாயங்க் அகர்வால் 7 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். அதன் பின் ரோஹித் சர்மா - புஜாரா இணைந்து ஆடினர். இந்திய அணிக்கு விக்கெட்டும் போகாமல், வேகமாக ரன்னும் குவிக்க வேண்டும் என்ற நிலை இருந்தது.

ரோஹித் அதிரடி

ரோஹித் அதிரடி

ரோஹித் சர்மா வழக்கம் போல தன் அதிரடியை காட்டத் துவங்கினார். அவ்வப்போது சிக்ஸ் அடித்து பட்டையைக் கிளப்பினார். அப்படி இருந்தும் அணியின் ரன் ரேட் மூன்றை தாண்டவில்லை.

கட்டை போட்ட புஜாரா

கட்டை போட்ட புஜாரா

அதற்கு முக்கிய காரணம், புஜாரா. டெஸ்ட் மன்னன் என பெயர் எடுத்த புஜாரா சூழ்நிலை உணராமல் கட்டை போட்டு ஆடி வந்தார். 61 பந்துகளில் வெறும் 8 ரன்கள் எடுத்து வெறுப்பேற்றினார்.

26வது ஓவரில் என்ன ஆச்சு?

26வது ஓவரில் என்ன ஆச்சு?

26வது ஓவரின் இரண்டாம் பந்தை சந்தித்தார் ரோஹித். அப்போது அவர் பந்தை அடித்து விட்டு புஜாரா ரன் ஓடி வர வேண்டும் என எதிர்பார்த்தார். ஆனால், புஜாரா நின்ற இடத்திலேயே நங்கூரம் போட்டது போல நின்று கொண்டிருந்தார்.

திட்டி விட்ட ரோஹித்

திட்டி விட்ட ரோஹித்

அதைக் கண்டு கடுப்பான ரோஹித் சர்மா, புஜாராவை பார்த்து, "புஜி ஓடி வா.. ****" என ஹிந்தியில் கூறினார். ரோஹித் சர்மா கூறிய கெட்ட வார்த்தை இங்கிலாந்து வீரர் "பென் ஸ்டோக்ஸ்" பெயரை உச்சரிப்பது போன்ற ஒரு வார்த்தை.

கோலி நடவடிக்கை

கோலி நடவடிக்கை

இதுவரை இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி தான் எப்போதும் ஆக்ரோஷமாக இருப்பார். கெட்ட வார்த்தைகளில் பலரையும் வசை பாடுவார். சில சமயம் இந்திய பந்துவீச்சாளர்கள் விக்கெட் எடுத்தால் மகிழ்ச்சியில் கெட்ட வார்த்தையில் பேசுவார்.

கோலியாக மாறிய ரோஹித்

கோலியாக மாறிய ரோஹித்

தற்போது துவக்க வீரராக தன் முதல் டெஸ்ட் போட்டியிலேயே அணியின் முக்கிய வீரராக மாறி விட்ட ரோஹித் சர்மாவும் பதற்றத்தில் கெட்ட வார்த்தையில் பேசி இருப்பது அதிர்ச்சியாக அமைந்தது.

பென் ஸ்டோக்ஸ் என்ன சொன்னார்?

மேலும், ரோஹித் சர்மா பேசியது ஸ்டம்ப் மைக்கில் எல்லோருக்கும் கேட்டது. ரசிகர்கள் அதை இணையத்தில் பரப்பி வருகிறார்கள். இதனிடையே, இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ், இந்த முறை தன் பெயரை சொன்னது கோலி இல்லை, ரோஹித் என்று கலாய்த்துள்ளார்.

Story first published: Saturday, October 5, 2019, 19:57 [IST]
Other articles published on Oct 5, 2019
English summary
IND vs SA : It is shocking to see, Rohit sharma cursed test specialist Pujara during the match.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+