Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சார் ஏன் இப்படிலாம் பண்றீங்க? தவான் செய்த அந்த காரியம்.. ரகசிய வீடியோ எடுத்து வெளியிட்ட ரோஹித் சர்மா

பெங்களூரு : இந்திய அணியின் துவக்க வீரர் ஷிகர் தவானை அவருக்கே தெரியாமல் ரகசிய வீடியோ எடுத்து அதை வெளியிட்டார் சக வீரர் ரோஹித் சர்மா.

அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஷிகர் தவானுக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி செய்கிறார்? என பதறிப் போனார்கள்.

பின்னர் தவான் தன் செயலுக்கு விளக்கம் அளித்து இருக்கிறார். அவர் விளக்கம் அளிக்காமல் போயிருந்தால், பைத்தியம் பிடித்து விட்டது என்று முடிவு கட்டி இருப்பார்கள்.

டி20 தொடர்

டி20 தொடர்

இந்தியா - தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் தொடரில் தவான், ரோஹித் சர்மா உள்ளிட்ட இந்திய வீரர்கள் பங்கேற்று உள்ளனர் முதல் டி20 மழையால் கைவிடப்பட்டது. இரண்டாவது டி20யில் தவான் 40, கோலி 72 ரன்கள் எடுத்தனர். இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

விமான பயணம்

விமான பயணம்

இதை அடுத்து இந்திய வீரர்கள் பெங்களூருவில் நடைபெற உள்ள மூன்றாவது டி20யில் பங்கேற்க விமானத்தில் பயணம் செய்தனர். அப்போது ஷிகர் தவான் ஒரு விசித்திரமான காரியத்தை செய்தார்.

ரோஹித் வீடியோ எடுத்தார்

அதைப் பார்த்த ரோஹித் சர்மா அவருக்கே தெரியாமல் ரகசியமாக வீடியோ எடுத்தார். பின்னர் இன்ஸ்டாகிராமில் அதை வெளியிட்டுள்ளார். அதைப் பார்த்த ரசிகர்கள் சிலர் அதிர்ந்து போனார்கள். சிலர் தவான் என்ன செய்கிறார் என குழப்பம் அடைந்தனர்.

என்ன செய்தார் தவான்?

என்ன செய்தார் தவான்?

அந்த வீடியோவில், தவான், ரோஹித்துக்கு அருகே அமர்ந்துள்ளார். கண்ணை மூடிக் கொண்டு, தீவிரமாக தலையை ஆட்டிக் கொண்டு, தனக்கு தானே ஏதோ பேசிக் கொண்டு இருக்கிறார். ஒரு கட்டத்தில் தனக்கு தானே சிரித்துக் கொள்கிறார்.

ரசிகர்கள் கேள்வி

ரசிகர்கள் கேள்வி

இதைக் கண்டு "தவானுக்கு என்னங்க ஆச்சு?" என கேள்வி கேட்டு ரசிகர்கள். தவான் தூக்கத்தில் உளறிக் கொண்டு இருக்கிறாரா? அல்லது வீடியோ எடுக்கிறார் என தெரிந்து வேண்டுமென்றே நடிக்கிறாரா? என்ற கேள்விகள் எழுந்தன.

தவான் விளக்கம்

தவான் விளக்கம்

இந்த நிலையில், தவான் இந்த வீடியோவிற்கு விளக்கம் அளித்துள்ளார். தான் ஒரு கவிதையை கூறிக் கொண்டு இருந்த போது ரோஹித் படம் பிடித்து விட்டார். நான் அதை அனுபவித்துக் கொண்டு இருந்தேன். அதே போன்ற ஆர்வத்தில் நான் படித்து இருக்கலாம் என கூறியுள்ளார்.

கவிதை பிடிக்கும்

கவிதை பிடிக்கும்

தவானுக்கு கவிதைகள் பிடிக்கும் என பல முறை கூறி உள்ளார். உலகக்கோப்பை தொடரின் போது காயத்தால் அணியில் இருந்து நீக்கப்பட்ட போது கூட தவான், ஒரு கவிதையை கூறி தனக்கு தானே ஆறுதல் கூறி பதிவிட்டு இருந்தார்.

3வது டி20

3வது டி20

இந்தியா - தென்னாப்பிரிக்கா மோதும் 3வது டி20யில் ரோஹித் - தவான் என்ன செய்யப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. இரண்டாம் டி20 யில் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்த ரோஹித் சர்மா, இந்த முறை நீடித்து ஆடுவாரா? என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு உள்ளனர் ரசிகர்கள்.

Story first published: Sunday, September 22, 2019, 18:09 [IST]
Other articles published on Sep 22, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+