Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சம்மட்டி அடி.. அலையவிட்டு அவமானப்படுத்திய சிலருக்கு செம பதிலடி கொடுத்த சீனியர் ரோஹித்!

Recommended Video

IND VS SA 1ST TEST | ROHIT SHARMA | பிராட்மேன் சாதனையை உடைத்த ரோஹித் சர்மா-வீடியோ

விசாகப்பட்டினம் : இந்திய அணியின் மூத்த வீரர் ரோஹித் சர்மா தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து பதிலடி கொடுத்துள்ளார்.

ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20களில் உலகின் முன்னணி பேட்ஸ்மேன். இன்றைய இளம் துவக்க வீரர்கள் பலருக்கு முன்மாதிரி வீரர் ரோஹித் தான்.

அப்படி இருந்தும் இந்திய டெஸ்ட் அணியில் அவருக்கு நிரந்தர வாய்ப்பு இல்லை. இரண்டு - மூன்று போட்டிகள் வாய்ப்பு கொடுப்பதும், பின்னர் நீக்குவதுமாக அலைக்கழிக்கப்பட்டார் ரோஹித் சர்மா. வெஸ்ட் இண்டீஸ்-இல் உச்சகட்ட அவமானம் நடந்தது. அதை எல்லாம் மீறி பதிலடி கொடுத்துள்ளார் ரோஹித்.

2013 முதல்..

2013 முதல்..

கடந்த 2013 முதல் டெஸ்ட் போட்டிகளில் ஆடி வருகிறார் ரோஹித் சர்மா. தன் முதல் இரண்டு இன்னிங்க்ஸ்களில் மிடில் ஆர்டர் வீரராக இரண்டு சதங்கள் அடித்து டெஸ்டில் அட்டகாச அறிமுகம் ஆனார் ரோஹித்.

சிறிய இடைவெளி

சிறிய இடைவெளி

ஆனால், இடையே பெரிய அளவில் ரன் குவிக்காமல் தடுமாறினார். அதனால், சில டெஸ்ட் போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. 2017 இலங்கை டெஸ்ட் தொடரின் இரண்டு போட்டிகளில் சதம், அரைசதம் என விளாசி மீண்டும் நம்பிக்கை அளித்தார்.

தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடர்

தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடர்

அதன் பின் 2018 துவக்கத்தில் ஆடிய தென்னாப்பிரிக்க தொடரில் அரைசதம் அடிக்கவில்லை. மூன்று போட்டிகளில் 116 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதனால், அவர் மீது விமர்சனம் எழுந்தது. ஆனால், அணியில் இருந்து நீக்கும் அளவுக்கு அவர் மோசமாக ஆடி விடவில்லை என்பதும் உண்மை.

அணியில் நீக்கம்

அணியில் நீக்கம்

அப்படி இருந்தும், தென்னாப்பிரிக்கா தொடருக்கு பின் டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மாவுக்கு வாய்ப்பு வழங்கவில்லை இந்திய அணி நிர்வாகம். அதற்கு சரியான காரணமும் கூறவில்லை. அதன் பின் இங்கிலாந்து டெஸ்ட் தொடர், வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர்களில் அவருக்கு வாய்ப்பு இல்லை.

ஆஸ்திரேலிய தொடர்

ஆஸ்திரேலிய தொடர்

முன்னாள் வீரர்கள் பலரும் அழுத்தம் கொடுத்ததை அடுத்து ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டார் ரோஹித் சர்மா. அங்கே இரண்டு போட்டிகளில் மட்டுமே ஆடினார். அதில் ஒரு அரைசதம் அடித்து நம்பிக்கை அளித்தார்.

வெஸ்ட் இண்டீஸ்-இல் வாய்ப்பு இல்லை

வெஸ்ட் இண்டீஸ்-இல் வாய்ப்பு இல்லை

பின்னர், உலகக்கோப்பை தொடரில் ஐந்து சதங்கள் விளாசிய ரோஹித் சர்மா, வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் முக்கிய இடத்தை பெறுவார். அவரை துவக்கமிடில் ஆர்டரில் இருந்து மாற்றி துவக்க வீரராக ஆட வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனால், களமிறங்கும் அணியில் வாய்ப்பு அளிக்காமல் வெளியே அமர வைக்கப்பட்டார்.

பெரிய அவமானம்

பெரிய அவமானம்

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பாதியில் அணியில் இருந்து நீக்கப்பட்ட ராகுலுக்கு வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் துவக்க வீரராக வாய்ப்பு அளிக்கப்பட்டது. ரோஹித் சர்மா மிடில் ஆர்டர் வீரர் என்பதால், மற்ற மிடில் ஆர்டர் வீரர்களை காட்டி அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.

வெளியே அமர வைக்கப்பட்டார்

வெளியே அமர வைக்கப்பட்டார்

ராகுல் உலகக்கோப்பை தொடரில் நன்றாக ஆடியதால் மீண்டும் துவக்க வீரராக வாய்ப்பு அளிக்கப்பட்டது என்றார்கள். அதே உலகக்கோப்பை தொடரில் ஐந்து சதம் அடித்த ரோஹித் சர்மா உத்தேச அணியில் தேர்வு செய்யப்பட்டும், போட்டியில் வாய்ப்பு இல்லாமல் வெளியே அமர வைக்கப்பட்டார்.

வேறு வழியின்றி வாய்ப்பு

வேறு வழியின்றி வாய்ப்பு

ராகுல் தவறான ஷாட்களை ஆடி வந்ததால், அணியில் இருந்து நீக்கப்பட்டார். தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் வேறு வழியின்றி ரோஹித் சர்மாவுக்கு துவக்க வீரராக வாய்ப்பு கொடுத்தது இந்திய அணி நிர்வாகம். டெஸ்ட் தொடரில் அறிமுகம் ஆகி சுமார் ஆறு ஆண்டுகளுக்குப் பின் முதன் முறையாக துவக்க வீரராக ஆடும் வாய்ப்பை பெற்றார் ரோஹித்.

சம்மட்டி அடி

சம்மட்டி அடி

தனக்கு கிடைத்த முதல் வாய்ப்பிலேயே தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக சதம் அடித்து மிரட்டி இருக்கிறார். இந்த சதம் வெறும் சதம் அல்ல. தொடர்ந்து தன்னை அலைக்கழித்து, அவமானப்படுத்திய சிலருக்கு சம்மட்டி அடி.

Story first published: Wednesday, October 2, 2019, 17:16 [IST]
Other articles published on Oct 2, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+