
முத்திரை பதித்த ரோஹித்
இரட்டை சதத்திற்கு முன் ரோஹித் சர்மா சிக்ஸ் அடித்து தான் சதம் அடித்து இருந்தார். சேவாக் போலவே அதிரடியாக ஆடும் ரோஹித் சர்மா, துவக்க வீரராக முத்திரை பதித்து வருகிறார்.

இந்தியா பேட்டிங்
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வருகிறது. துவக்கத்தில் இந்திய அணி மூன்று விக்கெட்களை 39 ரன்களுக்கு இழந்து மோசமாக காட்சி அளித்தது.

தாக்குப் பிடித்த ரோஹித் - ரஹானே
அப்போது ஜோடி சேர்ந்த ரோஹித் சர்மா - ரஹானே ஜோடி விரைவாக ரன் குவித்தது. இருவரும் இடைவிடமால் பவுண்டரி அடித்து வந்தனர். இந்த ஜோடி நான்காவது விக்கெட்டுக்கு 267 ரன்கள் குவித்தது.

ரோஹித் அடித்த சதம்
சிறப்பாக ஆடிய ரோஹித் சர்மா சதம் கடந்தார். அது அவரின் ஆறாவது டெஸ்ட் சதம் ஆகும். மேலும், அந்த சதம் அடிக்கும் போது 95 ரன்களில் இருந்து சிக்ஸ் அடித்து சதத்தை எட்டி இருந்தார் ரோஹித்.

சேவாக் போன்ற ஆட்டம்
அப்போதே சேவாக் போல ரோஹித் சர்மா ஆடி வருகிறார் என கூறப்பட்டது. சதம் அடிப்பதற்குள் நான்கு சிக்ஸ் அடித்து இருந்தார் ரோஹித் சர்மா. ஒரே டெஸ்ட் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த சாதனையையும் அவர் முறியடித்து இருந்தார்.

199 ரன்களுடன் இடைவேளை
இந்த நிலையில், இரண்டாம் நாள் ஆட்டதிலும் ரோஹித் - ரஹானே ஜோடி சிறப்பாக ஆடியது. ரஹானே சதம் அடித்து 115 ரன்களில் வெளியேறினார். ரோஹித் சர்மா சரியாக 199 ரன்கள் எடுத்து இருந்த போது உணவு இடைவேளை வந்தது.

சிக்ஸ் அடித்து இரட்டை சதம்
அதனால், நீண்ட நேரம் ரோஹித் இரட்டை சதம் அடிப்பதை காண ரசிகர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இடைவேளை முடிந்து வந்தவர், முதல் ஓவரை மெய்டன் ஆக ஆடினார். அடுத்து சந்தித்த பந்தில் சிக்ஸ் அடித்து இரட்டை சத்தத்தை எட்டினார்.

சேவாக் பிறந்த நாள்
சேவாக் பிறந்த நாளன்று ரோஹித் சர்மா, அவரைப் போலவே எதைப் பற்றியும் யோசிக்காமல் சிக்ஸ் அடித்து இரட்டை சதம் எட்டி அவருக்கு மறக்கவே முடியாத பிறந்த நாள் பரிசு அளித்தார்.

ரோஹித் ஆட்டமிழந்தார்
இரட்டை சதம் அடித்த பின் அதிரடியாக ஆட முயன்ற ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார். 255 பந்துகளில் 212 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார் ரோஹித். இவரின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி ஓவருக்கு 4 ரன்கள் என்ற அளவில் ரன் குவித்து இருந்தது.

பவுண்டரி, சிக்ஸர்கள்
ரோஹித் 28 ஃபோர் மற்றும் 6 சிக்ஸ் அடித்து இருந்தார். குறிப்பாக, சுழற் பந்துவீச்சாளர்கள் ஓவர்களை குறி வைத்து தாக்கினார். வேகப் பந்துவீச்சாளர்களின் ஓவர்களிலும் அவ்வப்போது பவுண்டரிகள் பறந்தன.


Click it and Unblock the Notifications