Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. எல்லோரையும் ஏமாற்றிய மூத்த வீரர்.. அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!

Recommended Video

IND VS SA | Rohit Sharma | எல்லோரையும் ஏமாற்றிய ரோஹித் ! அதிர்ச்சியில் ரசிகர்கள்!-வீடியோ

விஜயநகரம் : இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ள டெஸ்ட் தொடருக்கு முன்னதாக நடந்த பயிற்சிப் போட்டியில் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்துள்ளார் ரோஹித் சர்மா.

ரோஹித் சர்மா நீண்ட போராட்டத்துக்குப் பின் டெஸ்ட் அணியில் இடம் பெற்று, அதிலும் துவக்க வீரராக வாய்ப்பு பெற்று இருக்கிறார்.

துவக்க வீரராக தன் முதல் போட்டியில் ஆடும் முன் பயிற்சிப் போட்டியில் தன் திறமையை காண்பித்து அணி நிர்வாகத்தை மிரள வைப்பார் என்று பார்த்தால் மொத்தமாக ஏமாற்றி இருக்கிறார்.

பாதிப்பு ஏற்படலாம்

பாதிப்பு ஏற்படலாம்

அது மட்டுமின்றி, ரோஹித் சர்மா துவக்க வீரராக ஆட வேண்டும் என்று குரல் எழுப்பிய ரசிகர்கள் பலரும் அதிர்ந்து போய் உள்ளனர். இந்த டக் அவுட் அவருக்கு அணியில் பாதிப்பை ஏற்படுத்தலாம். இளம் வீரர் ஒருவர் தன் வாய்ப்புக்காக காத்துக் கொண்டு இருக்கிறார்.

தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடர்

தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடர்

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ள மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா அணியின் துவக்க வீரராக அறிவிக்கப்பட்டார். முதன்முறையாக டெஸ்ட் அணியில் துவக்க வீரராக வாய்ப்பு பெற்று இருந்தார் ரோஹித்.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

இந்த டெஸ்ட் தொடருக்கு முன் போர்டு பிரெசிடென்ட் லெவன் (இந்தியா) - சவுத் ஆப்ரிகன்ஸ் அணிகளுக்கு இடையே பயிற்சிப் போட்டி நடந்தது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய சவுத் ஆப்ரிகன்ஸ் அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 279 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது.

ரோஹித் டக் அவுட்

ரோஹித் டக் அவுட்

அடுத்து இந்திய பயிற்சி அணி ஆட வந்தது. ரோஹித் கலக்கப் போகிறார். டெஸ்ட் தொடருக்கு முன் ட்ரைலர் காட்டப் போகிறார் என்றெல்லாம் எதிர்பார்ப்பு எகிறிக் கிடந்தது. ஆனால், தான் சந்தித்த இரண்டாவது பந்தில் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார் மூத்த வீரர் ரோஹித் சர்மா.

நீண்ட போராட்டம்

நீண்ட போராட்டம்

அவரது இந்த டக் அவுட்டால் அவரது டெஸ்ட் அணி வாய்ப்பு மீண்டும் ஊசலாட்டத்திற்கு சென்றுள்ளது. நீண்ட காலமாக டெஸ்ட் அணியில் இடம் இல்லாமல் தவித்து வந்த ரோஹித் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் ஆடினார்.

அணியில் அலைக்கழிப்பு

அணியில் அலைக்கழிப்பு

எனினும், வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் அவரை பெஞ்சில் அமர வைத்து அலைக்கழித்தது இந்திய அணி நிர்வாகம். ரோஹித் சர்மாவை டெஸ்ட் அணியில் ஆட வைக்க வேண்டும் என தொடர்ந்து குரல்கள் எழுந்தன.

ராகுல் சொதப்பல்

ராகுல் சொதப்பல்

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் துவக்க வீரர் ராகுல் சொதப்பலாக ஆடினார். ஏற்கனவே, ஒருநாள் மற்றும் டி20 அணியிலும் சரியாக ஆடாத ராகுல், தவறான ஷாட்கள் ஆடுவதை நிறுத்த முடியாமல் தவித்தார்.

இறுதியாக வாய்ப்பு

இறுதியாக வாய்ப்பு

அதனால், அவரை நீக்கி விட்டு, டெஸ்ட் அணியில் மிடில் ஆர்டரில் ஆடி வரும் ரோஹித் சர்மாவை துவக்க வீரராக மாற்றி வாய்ப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டது. தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் அப்படி தான் வாய்ப்பு பெற்றார் ரோஹித்.

என்ன பாதிப்பு?

என்ன பாதிப்பு?

தற்போது டக் அவுட் ஆகி இருப்பதால் ரோஹித் சர்மாவிற்கு பாதிப்பு ஏற்படுமா? தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இருந்தே ரோஹித் சர்மா ரன் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

ஷுப்மன் கில்லுக்கு வாய்ப்பா?

ஷுப்மன் கில்லுக்கு வாய்ப்பா?

ஒரு வேளை ரோஹித் சர்மா முதல் டெஸ்ட் போட்டியில் ரன் குவிக்கவில்லை என்றால், அடுத்த இரு டெஸ்ட் போட்டிகளில் இளம் வீரர் ஷுப்மன் கில் வாய்ப்பு பெறலாம். என்ன செய்யப் போகிறார் ஹிட்மேன் ரோஹித்?

Story first published: Saturday, September 28, 2019, 14:18 [IST]
Other articles published on Sep 28, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+