Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

4 சிக்ஸ்.. சூப்பர் செஞ்சுரி! ஓபனிங்கே கதி கலங்குதே.. சேவாக்கை பார்த்த மாதிரியே இருந்துச்சு ஹிட்மேன்!

விசாகப்பட்டினம் : இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா சதம் கடந்து மிரட்டி இருக்கிறார்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் இன்று தொடங்கியது.

இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. ரோஹித் சர்மா முதன் முறையாக துவக்க வீரராக டெஸ்ட் அணியில் இடம் பெற்றார்.

பயிற்சிப் போட்டி சொதப்பல்

பயிற்சிப் போட்டி சொதப்பல்

தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் முதன் முறையாக துவக்க வீரராக டெஸ்ட் அணியில் களமிரங்க இருந்த ரோஹித் சர்மா, முன்னதாக நடந்த பயிற்சிப் போட்டியில் ஆடினார். அந்தப் போட்டியில் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார் அவர்.

அதிக எதிர்பார்ப்பு

அதிக எதிர்பார்ப்பு

அதனால், டெஸ்ட் தொடரில் என்ன செய்யப் போகிறார்? முதல் டெஸ்டில் சொதப்பினால் அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்விகள் இருந்தன. ரோஹித் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

நிதான ஆட்டம்

நிதான ஆட்டம்

இந்த நிலையில் களமிறங்கிய ரோஹித் சர்மா சிறப்பாக ஆடினார். துவக்கத்தில் சற்று நிதானம் காட்டி தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்களை தவிக்க விட்டது மாயங்க் அகர்வால் - ரோஹித் சர்மா ஜோடி.

4 சிக்ஸ் விளாசல்

4 சிக்ஸ் விளாசல்

அதன் பின் வேகம் எடுத்த ரோஹித் சர்மா அவ்வப்போது சிக்ஸ் அடித்து தன் ரன்னை உயர்த்திக் கொண்டார். சதம் அடிக்கும் முன்பே நான்கு சிக்ஸ் அடித்தார் அவர்.

நான்காவது சதம்

நான்காவது சதம்

154 பந்துகளில் தன் நான்காவது டெஸ்ட் சதத்தை நிறைவு செய்தார் ரோஹித் சர்மா. துவக்க வீரராக இதுவே ரோஹித் சர்மாவின் முதல் சதம் ஆகும். துவக்க வீரராக ஆடும் முதல் போட்டியிலேயே சதம் அடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சேவாக் போன்ற ஆட்டம்

சேவாக் போன்ற ஆட்டம்

சேவாக் டெஸ்ட் போட்டிகளில் கூட ஓரளவு அதிரடியாக தான் ஆடுவார். அதே போல ஆடிய ரோஹித் சர்மா, அரைசதம் அடித்த பின், தன் ஸ்ட்ரைக் ரேட்டை 60க்கு மேல் தான் வைத்திருந்தார்.

துவக்க வீரர்கள் பிரச்சனை

துவக்க வீரர்கள் பிரச்சனை

இந்திய டெஸ்ட் அணியில் சரியான துவக்க வீரர்கள் இல்லாமல் தவிக்கும் நிலை இருந்தது. தவான், முரளி விஜய், ராகுல், ப்ரித்வி ஷா என பலரும் துவக்க வீரராக ஆடி, பின் அணியில் இடம் பெற முடியாத நிலை வந்தது.

ரோஹித் சர்மா தீர்வு

ரோஹித் சர்மா தீர்வு

அந்த பிரச்சனைக்கு ரோஹித் சர்மா முற்றுப் புள்ளி வைத்துள்ளார். 2013இல் இருந்து டெஸ்ட் அணியில் வருவதும், போவதுமாக இருக்கும் ரோஹித் சர்மா, இதுவரை டெஸ்ட் போட்டிகளில் துவக்கம் அளித்ததே இல்லை. எனினும், துவக்க வீரராக தன் முதல் வாய்ப்பிலேயே சதம் அடித்து அணிக்கு தீர்வு அளித்துள்ளார்.

Story first published: Wednesday, October 2, 2019, 14:44 [IST]
Other articles published on Oct 2, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+