Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோஹித் அடித்த “சேவாக்” ஷாட்.. உணர்ச்சிவசப்பட்ட ரசிகர்கள்.. உடைந்து நொறுங்கிய சாதனைகள்!

Recommended Video

India vs South Africa 3rd Test | Rohit Sharma hits 6th test ton

ராஞ்சி : ரோஹித் சர்மா தன் ஆறாவது சதம் அடித்து தென்னாப்பிரிக்க அணியை திணறடித்து இருக்கிறார்.

அவர் சதம் அடித்த ஷாட், முன்னாள் துவக்க வீரர் சேவாக்கை நினைவு படுத்துவதாக அமைந்தது. அது குறித்து ரசிகர்கள் இணையத்தில் விவாதித்து வருகின்றனர். மேலும், ரோஹித் சர்மா பல்வேறு சாதனைகளை உடைத்து எறிந்தார்.

மூன்றாவது டெஸ்ட்

மூன்றாவது டெஸ்ட்

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே ஆன மூன்று போட்டிகள் கொண்ட மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

சரிந்த விக்கெட்கள்

சரிந்த விக்கெட்கள்

துவக்க வீரர் மயங்க் அகர்வால் 10, புஜாரா 0, கோலி 12 ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்தியா 39 ரன்களுக்கு 3 விக்கெட்கள் இழந்து அதிர்ச்சி அளித்தது. அணியை காக்க வேண்டிய பொறுப்பு ரோஹித் சர்மாவிடம் வந்தது.

ரோஹித் - ரஹானே கூட்டணி

ரோஹித் - ரஹானே கூட்டணி

அடுத்து வந்த ரஹானேவுடன் ஜோடி சேர்ந்த ரோஹித் சர்மா, சிறப்பாக ஆடினார். முதல் 33 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே எடுத்த ரோஹித், அதன் பின் பவுண்டரி மழை பொழியத் துவங்கினார்.

ரோஹித் அடித்த சிக்ஸர்கள்

ரோஹித் அடித்த சிக்ஸர்கள்

அரைசதம் அடிக்கும் முன் ஒரு சிக்ஸர் அடித்து இருந்த ரோஹித் அடுத்து இரண்டு சிக்ஸர் அடித்தார். அப்போதே "சேவாக் சாயல் தெரிகிறதே" என ரசிகர்கள் முணுமுணுத்தனர். தொடர்ந்து அதிரடியாக ஆடினார் ரோஹித்

சதம் அடித்த அந்த ஷாட்

சதம் அடித்த அந்த ஷாட்

95 ரன்கள் அடித்து இருந்த ரோஹித் சர்மா, சிக்ஸ் அடித்து தன் சதத்தை எட்டினார். ஒரு காலத்தில் சேவாக் மட்டுமே சிக்ஸ் அடித்து சதம் அடிப்பார். டி20 காலத்தில் கூட டெஸ்ட் போட்டிகளில் அதிகம் இது போன்ற நிகழ்வுகளை பார்க்க முடிவதில்லை.

அடுத்த சேவாக்

அடுத்த சேவாக்

இந்த நிலையில், ரோஹித் சர்மா, சேவாக் போலவே சிக்ஸ் அடித்து சதத்தை எட்டியதை கண்ட ரசிகர்கள் பலரும் ரோஹித் தான் அடுத்த சேவாக் என இணையத்தில் கூறி வருகின்றனர்.

அதிக சிக்ஸ் சாதனை

அதிக சிக்ஸ் சாதனை

நான்காவது சிக்ஸ் அடித்து சதம் எட்டிய ரோஹித் சர்மா, சிக்ஸர் அடிப்பதில் மேலும் ஒரு உலக சாதனையை முறியடித்துள்ளார். ஒரே டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷிம்ரான் ஹெட்மயர் 15 சிக்ஸ் அடித்ததே முந்தைய சாதனையாக இருந்தது. இந்த தென்னாப்பிரிக்க தொடரில் 16 சிக்ஸர்கள் அடித்து அதை முறியடித்து இருக்கிறார் ரோஹித் சர்மா.

தோனி சாதனை சமன்

தோனி சாதனை சமன்

மேலும் தன் ஆறாவது டெஸ்ட் சதம் கடந்த ரோஹித் சர்மா, இந்திய அளவில் தோனியின் சதங்களை சமன் செய்தார். தோனி 90 டெஸ்ட் போட்டிகளில் ஆறு சதம் அடித்த நிலையில், ரோஹித் சர்மா 30 போட்டிகளிலேயே அதை சமன் செய்துள்ளார்.

கவாஸ்கர் சாதனை

கவாஸ்கர் சாதனை

ஒரே தொடரில் மூன்று அல்லது அதற்கும் மேல் சதம் அடித்த இந்திய துவக்க வீரர்கள் வரிசையில் கவாஸ்கருக்கு அடுத்த ஒரே வீரராக இணைந்துள்ளார் ரோஹித். இந்த தொடரில் மூன்று சதம் அடித்துள்ளார்.

2000 டெஸ்ட் ரன்கள்

2000 டெஸ்ட் ரன்கள்

மேலும், ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் 2000 ரன்களை கடந்து அசத்தி இருக்கிறார். நடப்பு தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் மட்டுமே 400 ரன்களுக்கும் மேல் குவித்து இருக்கிறார்.

Story first published: Saturday, October 19, 2019, 16:07 [IST]
Other articles published on Oct 19, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+