For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முக்கிய சாதனையை சமன் செய்த ரோஹித்.. தோனி ரசிகர்கள் ஹேப்பி!

Recommended Video

Rohit sharma joins dhoni's record| பேட்டிங் சொதப்பினாலும் புதிய சாதனை நிகழ்த்திய ரோஹித் சர்மா

பெங்களூரு : ரோஹித் சர்மா இந்திய அளவில் அதிக டி20 ஆடிய வீரர்கள் பட்டியலில் தோனி சாதனையை சமன் செய்தார்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய மூன்றாவது டி20 போட்டியில் தான் ரோஹித் சர்மா இந்த சாதனையை செய்தார்.

ரோஹித் சர்மா இப்படி ஒரு சாதனையை செய்வார் என எதிர்பார்க்காத ரசிகர்கள் பலர் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். இந்திய அணியில் தற்போது ரோஹித் சர்மா தான் மூத்த வீரர் என்பது தோனி ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

ரோஹித் சர்மா டி20

ரோஹித் சர்மா டி20

தென்னாப்பிரிக்கா டி20 தொடரின் மூன்றாவது போட்டியில் ரோஹித் சர்மா பங்கேற்றார். இது அவரது 98வது சர்வதேச டி20 போட்டி ஆகும். டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகளை செய்து இருக்கும் ரோஹித் சர்மா, இதிலும் புதிய சாதனை படைத்தார்.

தோனி சாதனை சமன்

தோனி சாதனை சமன்

இந்திய அளவில் அதிக சர்வதேச டி20 போட்டிகளில் ஆடிய வீரர்கள் ப[பட்டியலில் தோனியுடன் முதல் இடத்தை பகிர்ந்து கொண்டார். இருவரும் 98 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி உள்ளனர்.

அடுத்து இருக்கும் வீரர்கள்

அடுத்து இருக்கும் வீரர்கள்

இவர்கள் இருவருக்கும் அடுத்து அதிக டி20 போட்டிகளில் ஆடிய வீரர்கள், சுரேஷ் ரெய்னா (78 போட்டிகள்), விராட் கோலி (72), யுவராஜ் சிங் (58 போட்டிகள், தவான் (55 போட்டிகள்).

தோனி இனி இல்லை

தோனி இனி இல்லை

தோனி இனி இந்திய டி20 அணியில் இடம் பெற மாட்டார் என கூறப்படுகிறது. இந்த நிலையில், தோனியின் வழியில் பயணிக்கும் ரோஹித் சர்மா தான் தோனி ரசிகர்களுக்கு பிடித்த வீரராக இருக்கிறார்.

ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மகிழ்ச்சி

தோனியின் முதல் இடத்தை ரோஹித் சர்மா பகிர்ந்து கொண்டு, இந்திய டி20 அணியின் மூத்த வீரர் என்ற பெருமையை பெற்று தோனி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். விரைவில் தோனியை விட அதிக போட்டிகளில் ஆடிய வீரராகவும் ஆவார் ரோஹித்.

2007இல் துவக்கம்

2007இல் துவக்கம்

2007 டி20 உலகக்கோப்பையில் தான் ரோஹித் சர்மா தன் டி20 பயணத்தை துவக்கினார். அப்போது மிடில் ஆர்டர் வீரராக, சுமாராக ஆடும் வீரராக தன் கிரிக்கெட் வாழ்வை துவக்கினார்.

தோனி மாற்றினார்

தோனி மாற்றினார்

அப்போது கேப்டனாக இருந்த தோனி தான் அவரை துவக்க வீரராக மாற்றி, வாய்ப்பு அளித்தார். அதை கெட்டியாக பிடித்துக் கொண்ட ரோஹித் சர்மா, இந்தியாவின் முன்னணி துவக்க வீரராக தற்போது வலம் வருகிறார்.

டி20 சாதனைகள்

டி20 சாதனைகள்

ஏற்கனவே, டி20 போட்டிகளில் பல சாதனைகளை தன் வசம் வைத்துள்ளார் ரோஹித். அதிக டி20 சதம் அடித்த வீரர், அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர், அதிக ரன் அடித்த வீரர் என பல்வேறு சாதனைகளை வைத்துள்ளார்.

போட்டியில் சொதப்பல்

போட்டியில் சொதப்பல்

எனினும், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ரோஹித் 9 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இரண்டாவது போட்டியிலும் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்து இருந்தார்.

Story first published: Monday, September 23, 2019, 13:21 [IST]
Other articles published on Sep 23, 2019
English summary
IND vs SA : Rohit sharma joins Dhoni’s record of playing most T20 internationals for India. Rohit Sharma also becomes senior member of the T20 squad.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+